புதிய பங்ளாதேஷ் பிரதமருக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் வாழ்த்து

திரு ரஹ்மானை சந்திக்க விருப்பம்: பிரதமர் வோங்

புதிய பங்ளாதேஷ் பிரதமருக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் வாழ்த்து

1 mins read
திரு தாரிக் ரஹ்மான் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன: பிரதமர் லாரன்ஸ் வோங்
dac4c499-b73f-4e78-80c7-5c63e6763c6f
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) நடந்த பதவியேற்பு நிகழ்வில் பங்ளாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான். - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி பங்ளாதேஷ் தேர்தலில் வெற்றிபெற்று அந்நாட்டு பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் தாரிக் ரஹ்மானுக்கு தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பங்ளாதேஷை முன்னேற்றப் பாதையில் தலைமையேற்று வழிநடத்த நாட்டு மக்கள் திரு தாரிக் ரஹ்மான் மீது வைத்துள்ள நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துவதாக வாழ்த்துச் செய்தியில் பிரதமர் வோங் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரும் பங்ளாதேஷும் நீண்டநாட்களாக நல்லுறவை வளர்த்துவந்துள்ளன என்றும் இருநாட்டு மக்களிடையே மரியாதையும் அணுக்கமானத் தொடர்புகளும் அடித்தளங்களாக உள்ளன என்றும் நிதி அமைச்சருமான திரு வோங் அச்செய்தியில் விளக்கினார்.

இந்த விவரங்களை வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை ஓர் அறிக்கையில் வெளியிட்டது.

வர்த்தகம், முதலீடு, துறைமுக நிர்வாகம், மின்னிலக்கம், திறன்மேம்பாடு போன்ற பல துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இருநாட்டு உறவுகளை வலுப்படுத்த திரு ரஹ்மானுடன் பணியாற்றுவதை தாம் எதிர்பார்த்திருப்பதாக திரு லாரன்ஸ் கூறினார்.

பங்ளாதேஷின் வளர்ச்சிப் பயணத்தில் சிங்கப்பூர் தொடர்ந்து ஆதரவு நல்கும் என்றும் புதிய பிரதமர் நல்ல ஆரோக்கியம் பெற்று ஆற்றும் பணிகளில் வெற்றியடைவதோடு விரைவில் திரு ரஹ்மானை சந்திக்க விருப்பம் தெரிவித்து வாழ்த்துச் செய்தியை நிறைவுசெய்தார் பிரதமர் வோங்.

குறிப்புச் சொற்கள்