எஸ்ஐஏ ஊழியர்களுக்கு 5.7 மாத போனஸ்

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் போனஸ் தொகை குறைவு

எஸ்ஐஏ ஊழியர்களுக்கு 5.7 மாத போனஸ்

1 mins read
fce34a2f-ece7-4fe0-800f-3f96027deda9
2026 நிதியாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் 18,233 முழுநேர ஊழியர்கள் உள்ளனர். கடந்த நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 17,912 ஆக இருந்தது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (எஸ்ஐஏ), 2026ஆம் நிதியாண்டிற்கான லாபப் பகிர்வு போனசாக தகுதியுள்ள ஊழியர்களுக்கு 5.7 மாத ஊதியத்தை வழங்க உள்ளது.

சிங்கப்பூர் எக்ஸ்போவில் வியாழக்கிழமை (மே 14) நடைபெற்ற விழாவில் இதனை அறிவித்ததாக பிஸ்னஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது.

கடந்த 2024, 2025 நிதியாண்டுகளில் முறையே 7.94, 7.45 மாதங்களாக இருந்த போனஸ் தொகையைவிட இது சற்று குறைவாகும். 2023ல் 6.65 மாத போனசை எஸ்ஐஏ வழங்கியது.

தொழிற்சங்கங்களுடன் ஏற்கெனவே எட்டப்பட்ட நீண்டகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. 2026ஆம் நிதியாண்டில் அந்நிறுவனத்தின் லாபம் 53.6 விழுக்காடு சரிந்து $945.5 மில்லியனாகக் குறைந்துள்ளது. இதற்கு கணக்கியல் ரீதியிலான ஆதாயங்கள் இல்லாததே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட அதிகரித்து 18,233 ஆக உயர்ந்துள்ள நிலையில், பணியாளர் செலவினமும் $3.9 பில்லியனாக அதிகரித்துள்ளது.

லாபம் குறைந்திருந்தாலும், ஊழியர்களின் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் இந்த போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது இணையத்தளம் வாயிலாக விமானப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்குத் தொடர்ந்து ஆட்களைத் தேர்வு செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்எஸ்ஐஏசிங்கப்பூர் ஏர்லைன்ஸ்போனஸ்ஊழியர்