மகளுக்குப் பாலியல் துன்புறுத்தல்: ஆடவருக்கு 12 ஆண்டு சிறை

மகளுக்குப் பாலியல் துன்புறுத்தல்: ஆடவருக்கு 12 ஆண்டு சிறை

1 mins read
9823cfd6-e0c1-4cb9-bbed-ccc88357a717
குற்றத்தை உயர் நீதிமன்றத்தில் ஆடவர் ஒப்புக்கொண்டார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

மகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஆடவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த குற்றத்தை உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அந்த 57 வயது ஆடவருக்கு திங்கட்கிழமை (ஏப்ரல் 20) தண்டனை விதிக்கப்பட்டது.

ஆறுக்கும் ஒன்பதுக்கும் இடைப்பட்ட வயதில் சிறுமி இருந்தபோது அந்தப் பாலியல் குற்றம் நிகழ்ந்தது.

அப்போது ஒரே வீட்டில் மனைவி, தாயார், மாமியார், மூத்த மகன் மற்றும் மகளுடன் ஆடவர் வசித்துவந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஒரு பிற்பகல் வேளையில், மற்றவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தபோது தமது படுக்கையறையில் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ய ஆடவர் முயன்றதாகக் கூறப்பட்டது.

அதுபற்றித் தமது பாட்டியிடம் அந்தச் சிறுமி கூறினார்.

ஆயினும், பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் மற்றும் ஆலோசகரிடம் அந்தச் சம்பவம் குறித்துக் கூறிய பிறகு, குறைந்தபட்சம் ஆறு ஆண்டுகள் கழித்து அது பற்றிக் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

பாலியல் வன்கொடுமை முயற்சி, குழந்தை மூலம் முறையற்ற பாலியல் செயல்களைச் செய்யத் தூண்டியது ஆகிய மற்ற இரு குற்றங்களும் தண்டனை விதிப்பின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.

குறிப்புச் சொற்கள்
உயர் நீதிமன்றம்பாலியல் குற்றம்தண்டனை