ராயல் சீக்ரெட் வெல்னஸ் ஆரோக்கிய நீரூற்று நிலையம் மூடல்

பயனீட்டாளர்களுக்கு $1 மில்லியனுக்கும் மேல் இழப்பு

ராயல் சீக்ரெட் வெல்னஸ் ஆரோக்கிய நீரூற்று நிலையம் மூடல்

1 mins read
9c65d39f-e90b-47da-a6d7-73ce789729b0
கிலினி ரோட்டில் உள்ள வின்ஸ்லண்ட் ஹவுசில் இருக்கும் ஆரோக்கிய நீரூற்று நிலையத்தைப் பார்வையிடுகிறார் பயனீட்டாளர் ஒருவர். - படம்: சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம்
Google News Preferred Icon

ராயல் சீக்ரெட் வெல்னஸ் நிலையம் மூடப்பட்டதால் பயனீட்டாளர்கள் ஒரு மில்லியன் வெள்ளிக்கும் மேல் இழந்துவிட்டனர்.

சிங்கப்பூர்ப் பயனீட்டாளர் சங்கம் அதனைத் திங்கட்கிழமை (மார்ச் 23) தெரிவித்தது.

ஆர்ச்சர்ட் வட்டாரத்தின் கிளினி ரோட்டில் உள்ள வின்ஸ்லண்ட் ஹவுசில் இருக்கும் அந்த ஆரோக்கிய நீரூற்று நிலையம் (ஸ்பா) கடந்த மாதம் (பிப்ரவரி) 28ஆம் தேதி மூடுவதாக ஃபேஸ்புக்கில் அறிவித்தது.

அது ஏறக்குறைய 30 ஆண்டுகள் இயங்கியது.

பயனீட்டாளர்களுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து மிகுந்த அக்கறை கொள்வதாகச் சங்கத்தின் தலைவர் மெல்வின் யோங் தெரிவித்தார். $1,045,000க்கும் மேல் இழப்பு ஏற்பட்டதாக 137 புகார்கள் சங்கத்திற்குக் கிடைத்திருப்பதாக அவர் சொன்னார்.

“பாதிக்கப்பட்டோரில் பாதிக்கும் மேற்பட்டோர் 46 வயதைக் கடந்தவர்கள். ஒவ்வொருவரும் இழந்த சராசரித் தொகை $6,000. ஆக அதிகமாக ஒருவருக்குக் கிட்டத்தட்ட $50,000 இழப்பு உண்டானது,” என்று திரு யோங் கூறினார்.

மூடப்போவது தெரிந்தும் நிலையம் பயனீட்டாளர்களிடமிருந்து கணிசமான அளவுக்கு முன்பணத்தைப் பெற்றிருக்கக்கூடும் என்று சங்கம் தெரிவித்தது.

“விசாரணைக்காகச் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் புகார்கள் பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளன,” என்று சங்கம் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பயனீட்டாளர்இழப்புமுன்பணம்விசாரணை