ரயிலில் எலி நடமாட்டம்; எஸ்எம்ஆர்டி தீவிர நடவடிக்கை

ரயிலில் எலி நடமாட்டம்; எஸ்எம்ஆர்டி தீவிர நடவடிக்கை

1 mins read
18a1bd42-355c-45f2-a668-93adbec02b68
அண்மையில் கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்றில் எலி ஓடியது. - படம்: SGFOLLOWSALL/ இன்ஸ்டகிராம்
Google News Preferred Icon

ரயில் நிலையங்களிலும் ரயில் பராமரிப்பு நிலையங்களிலும் பூச்சிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்மையில் கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்றில் எலி ஓடிக்கொண்டிருந்தது. அது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பலரால் பார்க்கப்பட்டது.

இதையடுத்து தற்போது எஸ்எம்ஆர்டி நிறுவனம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. எலி ஓடிய பகுதிகளிலும் சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது.

பயணிகள் ரயிலிலும் ரயில் நிலையங்களிலும் உணவு மற்றும் பானங்களை உண்ண வேண்டாம் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் கேட்டுக்கொண்டது. சிந்தப்படும் உணவுப் பொருள்களால் எலி உள்ளிட்டவை ரயில்களுக்குள் வரக்கூடும் என்று அது கூறியது.

பொதுவாக எலிகள் ரயில் நிலையங்களில் உள்ள மேடைகள் தண்டவாளங்கள், ரயில் பெட்டிகளுக்குக்கீழ் உள்ள பகுதிகள் ஆகியவற்றில் அவ்வப்போது நுழையக்கூடும். ரயில்கள் தினமும் சுத்தம் செய்யப்படுகின்றன என்று எஸ்எம்ஆர்டி தலைவர் லாம் ‌ஷியூ காய் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
எலிஎஸ்எம்ஆர்டிரயில்