பொதுப் போக்குவரத்தில் கனிவன்பு இயக்கம் தொடங்கியது

பொதுப் போக்குவரத்தில் கனிவன்பு இயக்கம் தொடங்கியது

1 mins read
9d485c05-7e6e-411a-bdb7-6008ad17fb1a
பொதுப் போக்குவரத்தில் கனிவன்பைப் பரப்புவதற்காகப் பயன்படுத்தப்படும் கதாபாத்திரங்களுடன் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பொதுப் போக்குவரத்தில் கனிவன்பை ஊக்குவிப்பதற்காக ஓராண்டு இயக்கம் அக்டோபர் 11ஆம் தேதி தொடங்கியது.

பயணம் இனிமையாக அமையவும் பயணிகள் ஒருவருக்கு ஒருவர் பரிவுடன் நடந்துகொள்வதை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.

‘நாம் ஒன்றாக சிந்தித்துச் செயல்படும்போது பயணம் சிறப்பாக அமையும்’ என்ற கருப்பொருளுடன் நிலப் போக்குவரத்து ஆணையம் அந்த இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறது.

2014ஆம் ஆண்டில் கதாபாத்திரங்களைக் கொண்டு அவசரமான பயணங்களுக்கு இடையே பயணிகளிடம் கனிவன்பைப் பரப்புவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டது.

ஸ்டாண்ட்-அப் ஸ்டேஸி, மூவ்-இன் மார்ட்டின், கிவ்-வே கிளெண்டா, பேக்-டவுன் பென்னி, ஹஷ்-ஹஷ் ஆகிய ஐந்து உருவங்கள் அதற்குப் பயன்படுத்தப்பட்டன.

இயக்கத்தின் ஒரு பகுதியாக அக்டோபர் 11ஆம் தேதி ஈசூன் நார்த்பாய்ண்ட் சிட்டியில் சாலைக் காட்சியும் தொடங்கப்பட்டது.

அக்கண்காட்சியில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளரான பே யாம் கெங், கதாபாத்திரங்களின் முழு உருவங்களை பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவைத்தார்.

குறிப்புச் சொற்கள்
பொதுப் போக்குவரத்துநிலப் போக்குவரத்து ஆணையம்பயணிகள்