தொகுதி உலா மேற்கொண்ட பிரித்தம் சிங்

தொகுதி உலா மேற்கொண்ட பிரித்தம் சிங்

1 mins read
836a8c35-592a-4916-9896-dad70810d329
பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் ஃபெங்ஷான் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) காலை தொகுதி உலா மேற்கொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் மீதான விசாரணையை அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அண்மையில் முடித்தது.

இதையடுத்து, திரு சிங்கும் பாட்டாளிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஃபெங்ஷான் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) காலை தொகுதி உலா மேற்கொண்டனர்.

காலை நேரத்தில் பரபரப்பாக இருக்கும் ஃபெங்ஷான் உணவங்காடி மற்றும் சந்தை ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் உள்ளது.

அங்கு திரு சிங்கும் கட்சியின் உறுப்பினர்கள் கிட்டத்தட்ட 40 பேரும் உணவங்காடி நிலையத்தில் இருந்த மக்களிடம் பேசினர்.

நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் பொய் உரைத்ததற்காகத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாட்டாளிக் கட்சியின் அரசியலமைப்பைத் திரு சிங் மீறினாரா என்று விசாரணை நடத்தப்பட்டது. இதனால் திரு சிங்கின் அரசியல் வாழ்க்கை தொடர்பாகப் பல கேள்விகள் எழுந்தன.

செங்காங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹீ டிங் ரூ, ஜேமஸ் லிம் மற்றும் முன்னாள் ஹவ்காங் நாடாளுமன்ற உறுப்பினர் பிங் எங் ஹுவாட் ஆகியோரைக் கொண்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு, ஏப்ரல் மாதம் விசாரணை அறிக்கையைக் கட்சியின் மத்திய செயற்குழுவிடம் சமர்ப்பித்தது.

ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் இடம்பெற்ற மூவரும் தொகுதி உலாவில் கலந்துகொள்ளவில்லை.

குறிப்புச் சொற்கள்