உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை வரவேற்றார் பிரதமர் வோங்

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை வரவேற்றார் பிரதமர் வோங்

1 mins read
2c993f6a-160d-4c35-a735-bd1d6550f217
பிரதமர் லாரன்ஸ் வோங்கும் இந்தியாவின் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். - படம்: லாரன்ஸ் வோங் ஃபேஸ்புக்

உத்தரப் பிரதேசம், இந்தியாவின் மூன்றாவது பெரிய பொருளியல் மாநிலம் மற்றும் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் வட்டாரங்களில் ஒன்றாகும்.

சிங்கப்பூர் நிறுவனங்கள் உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு துறைகளில், குறிப்பாக தளவாடங்கள், இணைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் முதலீடு செய்து வருகின்றன என்றும் மேலும் வலுவான வர்த்தக, முதலீட்டு இணைப்புகளுக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூருக்கு வருகை மேற்கொண்டிருக்கும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இஸ்தானாவில் திங்கட்கிழமை (பிப்ரவரி 23) சந்தித்து, அவரை வரவேற்றார் பிரதமர் லாரன்ஸ் வோங்.

“சிங்கப்பூர் மற்றும் உத்தரப் பிரதேசப் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் வர்த்தகப் பங்காளித்துவங்களை ஆதரிப்பதற்கும் உள்ள வாய்ப்புகள் குறித்து எங்களுக்கு நல்ல பரிமாற்றம் இருந்தது.

“முதலமைச்சர் ஆதித்யநாத் சிங்கப்பூரில் ஒரு பயனுள்ள அனுபவத்தைப் பெற வாழ்த்துகிறேன்,” என்றும் திரு வோங் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்