மலேசியாவுக்குப் பிரதமர் ஒரு நாள் பயணம்

மலேசியாவுக்குப் பிரதமர் ஒரு நாள் பயணம்

1 mins read
5b039307-9423-4a21-9ca1-80bf77d672f7
சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

திரு வோங்கிற்குத் திரு அன்வார் நோன்புத் திறப்பு விருந்தளிப்பார் எனச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

அதே நாளில் திரு வோங் நாடு திரும்புவார் என அமைச்சு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாPM WONGரமலான்இஃப்தார்