காணாமற்போன 7 வயது சிறுமி மீட்கப்பட்டதாகக் காவல்துறை தகவல்

காணாமற்போன 7 வயது சிறுமி மீட்கப்பட்டதாகக் காவல்துறை தகவல்

1 mins read
13fab3b4-2c41-4bbe-898d-b366ca17c7f3
சிறுமி நூர் அதீவா சலாம். - படம்: காவல்துறை
Google News Preferred Icon

பொங்கோல் வட்டாரத்தில் நவம்பர் 14ஆம் தேதி காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ஏழு வயது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இரு நாள்களுக்குப் பிறகு சிறுமியைக் கண்டுபிடித்தது குறித்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) பின்னேரத்தில் காவல்துறை தெரிவித்தது.

நூர் அதீவா சலாம் என்ற பெயரைக்கொண்ட அந்தச் சிறுமியை நவம்பர் 14 பிற்பகல் முதல் காணவில்லை என்று காவல்துறை இதற்கு முன் தெரிவித்து இருந்தது.

ஆகக் கடைசியாக புளோக் 322டி, சுமாங் வாக் என்னும் இடத்தின் அருகில் பிற்பகல் 1.50 மணிக்கு அந்தச் சிறுமி காணப்பட்டதாகவும் அது கூறி இருந்தது.

சிறுமியைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை அது நாடியது. சிறுமியின் இருப்பிடம் தெரிந்தோர் 1800-255-000 என்னும் காவல்துறையின் நேரடித் தொலைபேசி அல்லது www.police.gov.sg/i-witness என்னும் இணையத்தளம் வாயிலாகத் தெரிவிக்கலாம் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

சிறுமி தொடர்பான எல்லாவிதத் தகவல்களும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறை குறிப்பிட்டு இருந்தது.

குறிப்புச் சொற்கள்
சிறுமிமீட்புகாவல்துறை