பதவியிலிருந்து நீக்கப்பட்ட அதிகாரி $2 மில்லியன் இழப்பீடு கேட்கிறார்

பதவியிலிருந்து நீக்கப்பட்ட அதிகாரி $2 மில்லியன் இழப்பீடு கேட்கிறார்

1 mins read
d1b68c01-cb6b-4aa3-a9cc-2aa76f8cea5d
ஃபூ யூ நிறுவனத்திலிருந்து பதவிநீக்கம் செய்யப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் சியோவ். - கோப்புப்படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஃபூ யூ நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்ட அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் சியோவ் அந்நிறுவனத்திற்கு எதிராக பதிலடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தவறான முறையில் தான் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறியுள்ள அவர், சம்பளமாக 1.8 மில்லியன் வெள்ளியும் இழப்பீடாக 200,000 வெள்ளியும் தர வேண்டும் என்று கோரிக்கை கடிதங்களை ஃபூ யூவுக்கு அனுப்பியுள்ளார்.

பிளாஸ்டிக், உலோக உதிரிபாகங்களைத் தயாரிக்கும் ஃபூ யூ நிறுவனம், நவம்பர் 4 தேதியிடப்பட்ட கடிதம் டேவிட் சியோவிடமிருந்து வந்துள்ளதை உறுதி செய்துள்ளது. அதில் $1,8 மில்லியன் சம்பளம் தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நவம்பர் 5ஆம் தேதி இடப்பட்ட மற்றொரு கோரிக்கை கடிதத்தை திரு சியோவ், அந்நிறுவனத்தின் இயக்குநர்களுக்கும் ஃபூ யூவின் செயலாளருக்குத் தனித்தனியாக அனுப்பியுள்ளார். அதில் இழப்பீடாக 200,000 வெள்ளி தர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பில் சட்ட ஆலோசனைகளை நாடியுள்ளதாக ஃபூ யூ நிறுவனம் தெரிவித்து. எந்தவிதமான கோரிக்கை கடிதங்களோ சட்ட நடவடிக்கைகளோ நிறுவனத்தின் செயல்பாட்டை பாதிக்காது என்று அது கூறியது.

திரு. சியோவை பதவிநீக்கம் செய்ததற்கான காரணங்களை ஃபூ யூ விளக்கியுள்ளது.

40 வயதான அவர், நிறுவனத்திற்கு செய்ய வேண்டிய நம்பிக்கைக்குரிய கடமைகளிலிருந்து மீறிவிட்டதாகவும் தனது பதவியை தனக்குச் சாதகமாக அவர் பயன்படுத்திக் கொண்டார் என்றும் ஃபூ யூ குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்