ஓப்பன்குலோ: கட்டுப்பாடற்ற அணுகுமுறை ஆபத்து குறித்து எச்சரிக்கை

ஓப்பன்குலோ: கட்டுப்பாடற்ற அணுகுமுறை ஆபத்து குறித்து எச்சரிக்கை

1 mins read
2e6f52d2-78a2-4ae9-a80f-b5ebb1f7fa1a
முக்கிய உற்பத்தி மற்றும் நிதி மேலாண்மை போன்ற மிக முக்கியமான பணிகளில் ‘ஓப்பன்குலோ’ பயன்படுத்துவதை நிறுவனங்கள் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் குறிப்பிட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

‘ஓப்பன்குலோ’ எனும் செயற்கை நுண்ணறிவுக் கருவிக்குக் கோப்புகள் மற்றும் செயலிகளைத் தடையின்றி அணுகும் அதிகாரத்தை வழங்க வேண்டாம் என்று பயனர்களுக்குத் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக, முக்கியமான தரவுகளைக் கொண்டுள்ள தனிப்பட்ட மின்னணுச் சாதனங்களில் இக்கருவியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஆணையம் கேட்டுக்கொண்டது.

முக்கிய உற்பத்தி மற்றும் நிதி மேலாண்மை போன்ற மிக முக்கியமான பணிகளில் ‘ஓப்பன்குலோ’ பயன்படுத்துவதை நிறுவனங்கள் மறுஆய்வு செய்ய வேண்டும் என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

இக்கருவி தவறான முறையில் தன்னிச்சையாகச் செயல்படுவதைத் தவிர்க்கவும் பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் ரகசியத் தகவல்கள் கசிவதைத் தடுக்கவும் இந்த எச்சரிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

ஆஸ்திரிய மென்பொருள் உருவாக்குநரால் 2025ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ‘ஓப்பன்குலோ’, மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் சேவைகளுடன் இணைந்து அன்றாட வேலைகளைத் தானியக்க முறையில் செய்ய உதவும் ஒரு தனிப்பட்ட உதவியாளராகப் பிரபலமடைந்துள்ளது.

இருப்பினும், இதில் உள்ள குறைவான பாதுகாப்பு வசதிகளைக் கருத்தில்கொண்டு, பயனர்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தாங்களே மேற்கொள்ள வேண்டும் என ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்