ஓசிபிசி ‘360’ கணக்கிற்கான அதிகபட்ச வட்டி விகிதம் மே 1 முதல் குறைப்பு

ஓசிபிசி ‘360’ கணக்கிற்கான அதிகபட்ச வட்டி விகிதம் மே 1 முதல் குறைப்பு

2 mins read
7b7f0d4e-6bba-4f6a-b76d-a3085667ebea
மே 1 முதல், ஓசிபிசி 360 கணக்கில் உள்ள முதல் $100,000க்கு ஆண்டுக்கு அதிகபட்சம் 4.45 விழுக்காடு வட்டி வழங்கப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

வட்டி விகிதங்கள் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்கேற்ப, தனது முதன்மையான சேமிப்புக் கணக்கான ஓசிபிசி 360க்கான அதிகபட்ச வட்டி விகிதத்தை ஓசிபிசி வங்கி குறைக்கவுள்ளது. இது குறித்த அறிவிப்பை செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் வங்கி தெரிவித்தது.

மே 1ஆம் தேதி முதல், ஓசிபிசி 360 கணக்கில் உள்ள முதல் $100,000க்கு ஆண்டுக்கு அதிகபட்சம் 4.45 விழுக்காடு வட்டி வழங்கப்படும். தற்போது இது 5.45 விழுக்காடாக உள்ளது.

2025ல் இரண்டு முறை வட்டி குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2026ல் ஓசிபிசி வங்கி தனது 360 கணக்கிற்கான அதிகபட்ச வட்டி விகிதத்தைக் குறைப்பது இதுவே முதன்முறை.

“சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, மே 1 முதல் ஓசிபிசி 360 வட்டி விகிதங்களை மாற்றியமைக்கிறோம். இருப்பினும், கூடுதல் (போனஸ்) வட்டி பெறுவதற்கான தகுதி வரம்புகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை,” என்று வங்கியின் பேச்சாளர் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்கள் அதிகபட்ச வட்டி விகிதத்தைப் பெற கீழ்க்காணும் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்ய வேண்டும்:

* குறைந்தது $1,800 சம்பளத்தை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். * தேர்வு செய்யப்பட்ட கடன் அட்டைகளில் குறைந்தது $500 செலவிட வேண்டும். * சராசரி அன்றாட இருப்பை மாதந்தோறும் குறைந்தது $500 அதிகரிக்க வேண்டும். * வங்கியின் தகுதியுள்ள காப்புறுதி, முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

மேற்கூறிய நிபந்தனைகளை வாடிக்கையாளர்கள் பூர்த்திசெய்யத் தவறினாலும், அவர்களது கணக்கிலுள்ள இருப்புத் தொகைக்கு தற்போதைய அடிப்படை வட்டி விகிதமான ஆண்டுக்கு 0.05 விழுக்காடு எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து வழங்கப்படும் என்றும் வங்கி கூறியது.

குறிப்புச் சொற்கள்
ஓசிபிசிவங்கிவட்டி