பேச்சாளர் சதுக்கத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் இஸ்ரேலிய, பாலஸ்தீன சின்னங்கள் இருக்கக்கூடாது: காவல்துறை

பேச்சாளர் சதுக்கத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் இஸ்ரேலிய, பாலஸ்தீன சின்னங்கள் இருக்கக்கூடாது: காவல்துறை

1 mins read
839241a0-279a-4367-b526-f8df94418ced
ஹோங் லிம் பூங்கா பேச்சாளர் சதுக்கம். - கோப்புப் படம்: சாவ்பாவ்

ஹோங் லிம் பூங்காவின் பேச்சாளர் சதுக்கத்தில் சனிக்கிழமை (ஏப்ரல் 11), வெளிநாடுகள் ஆதிக்கம் செலுத்துவதை எதிர்த்து நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதில் இஸ்ரேல் அல்லது பாலஸ்தீனம் தொடர்பான சின்னங்களோ பொருள்களோ இடம்பெறக்கூடாது என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

அதோடு, இஸ்ரேல்-ஹமாஸ் பூசல் தொடர்பான விவகாரங்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்வைக்கக்கூடாது என்றும் அனுமதி வழங்கப்பட்ட அம்சங்களை மட்டுமே நிகழ்ச்சி கொண்டிருக்கவேண்டும் என்றும் காவல்துறை வலியுறுத்தியது. தேசிய பூங்காக் கழகத்துடன் இணைந்து வெளியிட்ட ஆலோசனை அறிக்கையில் காவல்துறை இவ்விவரங்களைக் குறிப்பிட்டது.

ஹோங் லிம் பூங்காவில் இந்நிகழ்ச்சியை நடத்த ஏற்பாட்டாளர்கள் விடுத்த கோரிக்கைக்கு தேசிய பூங்காக் கழகம் அனுமதி வழங்கியிருந்தது. பேச்சாளர் சதுக்கத்தில் உரையாற்றுவதற்கான நிபந்தனைகளுக்கு இணங்கி நடந்துகொள்ள ஏற்பாட்டாளர்கள் ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொதுக் கூட்டத்தைப் பற்றித் தாங்கள் அறிவதாகக் காவல்துறையினர் அறிக்கையில் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் இன, சமய ரீதியான விவகாரங்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ளுமாறு தேசிய பூங்காக் கழகம், ஏற்பாட்டாளர்களுக்கு நினைவூட்டியதாக ஆலோசனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் இடம்பெறும் உரைகளுக்கும் இது பொருந்தும்.

நிகழ்ச்சியில் வெளிநாட்டவர் யாரும் கலந்துகொள்ளாமல் பார்த்துக்கொள்ளுமாறும் கழகம், ஏற்பாட்டாளர்களுக்கு நினைவூட்டியது. இந்த நிபந்தனை, பேச்சாளர் சதுக்கத்தில் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் ஒன்று.

குறிப்புச் சொற்கள்