சிங்கப்பூருக்கு வரவுள்ள புதிய டிஸ்னி சொகுசுக் கப்பல்

சிங்கப்பூருக்கு வரவுள்ள புதிய டிஸ்னி சொகுசுக் கப்பல்

1 mins read
d718fa7a-d667-4868-8956-2ac41faf219e
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

சிங்கப்பூருக்கு 2025ஆம் ஆண்டு புதிய டிஸ்னி சொகுசுக் கப்பல் வரவுள்ளது.

5 ஆண்டு திட்டத்தின் கீழ் சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் டிஸ்னி சொகுசுக் கப்பல்துறையும் இணைந்து அக்கப்பலை நிர்வகிக்கவுள்ளன.

சிங்கப்பூருக்கு வரும் சொகுசுக் கப்பல்களில் இந்த கப்பல் ஆகப் பெரியது என்றும் டிஸ்னியின் ஆகப் பெரிய கப்பலாக இது இருக்கும் என்றும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் புதன்கிழமை (மார்ச் 29) தெரிவித்தார்.

இந்த கப்பல் டிஸ்னியின் எட்டாவது சொகுசுக் கப்பல், அதில் கிட்டத்தட்ட 6000 பயணிகளும் 2,300 சிப்பந்திகளும் தங்கமுடியும்.

சொகுசுக் கப்பல் தொடர்பான மேல்விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சொகுசுக் கப்பல் ஜெர்மனியில் கட்டப்படவுள்ளது. அங்கு ஏற்கெனவே டிஸ்னியின் மூன்று சொகுசுக் கப்பல்கள் கட்டப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பயணம்சுற்றுலாசொகுசுக் கப்பல்