தேசிய தினம் 2026: இஸ்தானாவில் பொது வரவேற்பு

தேசிய தினம் 2026: இஸ்தானாவில் பொது வரவேற்பு

1 mins read
f2db7579-22f5-42c8-afe1-7ada97b0995a
நோன்புப் பெருநாள், மே தினம் ஆகியவற்றுக்காக கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி இஸ்தானா மாளிகை பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது. - கோப்புப் படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி தேசிய தினமாகும்; அதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) இஸ்தானா அதிபர் மாளிகை காலை ஒன்பதரை மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.

இந்தப் பொது வரவேற்பு நிகழ்வின்போது இஸ்தானாவில் முதன்முறையாக மாலை வேளையில் வெளிப்புறத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறும். பல்வேறு பிரபல உள்ளூர் இசைக் கலைஞர்கள் அதில் பங்கேற்கவுள்ளனர்.

அதிபர் அலுவலகம் இந்த விவரங்களை புதன்கிழமை (ஜூலை 22) அறிக்கை மூலம் தெரிவித்தது. இசை நிகழ்ச்சியை வசதியாகக் கண்டுகளிக்க மக்கள் பாய்களையும் நாற்காலிகளையும் கொண்டுவரலாம். மாலை 6.45 மணிக்குப் பிறகு இஸ்தானா வளாகத்துக்குள் போகமுடியாது.

எல்லா வகையான வருகையாளர்களுக்கும் உகந்த விளையாட்டு, மரபு, சமூகம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலாசார படைப்புகளும் இடம்பெறும்.

எடுத்துக்காட்டாக பொக்கியா (Boccia), மெய்நிகர் அம்புவீச்சு, வானூர்திக் காற்பந்து போன்ற அனைவரையும் உள்ளடக்கும் விளையாட்டுகளில் வருகையாளர்கள் பங்கேற்கலாம். சிங்கப்பூருக்கான தங்களின் ஆசைகளையும் கனவுகளையும்கூட வருகையாளர்கள் பல்வேறு கூடங்களில் பகிர்ந்துகொள்ளலாம்.

மாலையில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியுடன் காலை 10 மணியிலிருந்து இரவு ஏழரை மணி வரை இசை, நடன, கலாசாரப் படைப்புகளும் இடம்பெறும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்இஸ்தானாதேசிய தினம் 2026நடவடிக்கைஇசைகலாசாரம்