மோசடியில் $21 மில்லியனுக்குமேல் இழப்பு; 620க்கும் மேற்பட்டோர்மீது ஐயம்

மோசடியில் $21 மில்லியனுக்குமேல் இழப்பு; 620க்கும் மேற்பட்டோர்மீது ஐயம்

1 mins read
608157a9-814c-4ec7-9489-121377f45e51
2,600க்கும் மேற்பட்ட வேலை மோசடி, இணைய காதல் மோசடி, இணைய வர்த்தக மோசடி, கடன் மோசடி போன்ற மோசடிகளில் ஈடுபட்டதாக 620க்கும் மேற்பட்டவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள். - படம்: லிம் யாஹுய்
Google News Preferred Icon

மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 620க்கும் மேற்பட்டவர்களைக் காவல்துறை விசாரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் $21 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை மோசடிகளில் இழந்ததாகக் கூறப்படுகிறது.

16 முதல் 71 வயதுக்குட்பட்டவர்கள் மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவர்களில் 421 ஆண்களும் 203 பெண்களும் அடங்குவர்.

அவர்கள் 2,600க்கும் மேற்பட்ட வேலை மோசடி, இணையக் காதல் மோசடி, இணைய வர்த்தக மோசடி, கடன் மோசடி போன்ற மோசடிகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறார்கள்.

ஜூலை 7க்கும் ஜூலை 20க்கும் இடைப்பட்ட நாள்களில் வர்த்தக விவகாரப் பிரிவின் அதிகாரிகளும் 7 காவல் பிரிவின் அதிகாரிகளும் இணைந்து மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கும் நபர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர் எனக் காவல்துறை திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

மேலும் வேலை மோசடி, பணமோசடி, உரிமம் இல்லாமல் பணம் செலுத்தும் சேவைகளை வழங்குதல் போன்ற குற்றங்களுக்காக அவர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
மோசடிவிசாரணை