21,000க்கும் அதிகமான மின்சிகரெட்டுகளுடன் பிடிபட்டவருக்குச் சிறை, அபராதம்

21,000க்கும் அதிகமான மின்சிகரெட்டுகளுடன் பிடிபட்டவருக்குச் சிறை, அபராதம்

1 mins read
a8208aab-1af8-46fb-9b40-1d412bc64831
திங்கட்கிழமை (ஜூலை 27) அரசு நீதிமன்ற வளாகத்திற்கு வந்தார் டெஸ்மண்ட் லிம் டீ வென். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

வேனில் 21,000க்கும் அதிகமான மின்சிகரெட்டுகளையும் அவற்றின் உதிரிப்பாகங்களையும் வைத்திருந்த 45 வயது டெஸ்மண்ட் லிம் டீ வென்னுக்கு திங்கட்கிழமை (ஜூலை 27) 22 வாரச் சிறைத்தண்டனையும் $7,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

விற்பனைக்காக மின்சிகரெட்டுகளை வைத்திருந்தது, அவற்றை விற்பனை செய்ய முனைந்தது உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகளை லிம் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

டெலிகிராம் செயலி வழியாக அறிமுகமான 'கேஷ்கேட்’ என்பவரிடம் பணிபுரிந்த லிம், பல்வேறு இடங்களிலிருந்து மின்சிகரெட்டுகளைச் சேகரித்து தமது வேனில் ஏற்றி, ஈசூன் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைப்பார். கடனாளியான இவர், பணத்திற்காக இந்த வேலையைச் செய்தார்.

கடந்த 2024 அக்டோபர் 11ஆம் தேதி காலை ஈசூன் வாகன நிறுத்துமிடத்தில் லிம்மைச் சிங்கப்பூர் சுங்கத்துறை அதிகாரிகள் வழிமறித்துச் சோதனை செய்தனர். சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரிகள் பின்னர் நடத்திய சோதனையில், லிம்மின் வாகனத்திலிருந்து $234,000க்கும் அதிக மதிப்புள்ள 21,078 மின்சிகரெட்டுகளும் அவற்றின் உதிரிப்பாகங்களும் கைப்பற்றப்பட்டன.

குறிப்புச் சொற்கள்
மின்சிகரெட்சிறைஅபராதம்