சிங்கப்பூரில் $18,888 வென்ற வெளிநாட்டு ஊழியர்

சிங்கப்பூரில் $18,888 வென்ற வெளிநாட்டு ஊழியர்

1 mins read
a658c16d-83fb-46e3-a5b1-fa6eb8f61b44
படம்: போலிசம் என்ஜினியரிங் -
Google News Preferred Icon

வெளிநாட்டு ஊழியரான ஆறுமுகம் செல்வம், 42, விளையாட்டு மூலம் $18,888 ரொக்கத்தை வெல்வார் என துளியும் நினைத்திருக்கவில்லை.

அவர் பணிபுரியும் 'போலிசம் என்ஜினியரிங்' நிறுவனத்தில் நிகழ்ச்சியின் விளையாட்டு அங்கத்தில் நெட்ஃபிளிக்ஸ் தொலைக்காட்சி தொடரான 'ஸ்குவிட் கேம்' நாடகத்தை மையமாக வைத்து ஏற்பாடு செய்யப்பட்ட சவால்மிக்க விளையாட்டில் முதலிடத்தில் வந்து இத்தொகையை அவர் வென்றார்.

"இந்தத் தொகையை நான் ஒன்றரை ஆண்டுகள் பணிபுரிந்தால்தான் ஈட்ட முடியும்" என்று சிரித்தபடியே கூறினார்.

கடந்த சனிக்கிழமை நிறுவனத்தின் வளாகத்தில் நிகழ்ச்சி இடம்பெற்றது.

இத்தொலைக்காட்சித் தொடரைப் பற்றி கேள்விப் படாத செல்வம் விளையாட்டுகளின் விதிமுறைகளைத் தெளிவாக புரிந்துகொள்ளாமல் விளையாடியதாகக் குறிப்பிட்டார்.

தமிழகத்தின் புதுக்கோட்டையிலிருந்து சிங்கப்பூருக்கு 15 ஆண்டுகளுக்கு முன் வந்த இவருக்கு திருமணமாகி பதின்ம வயதுகளில் ஒரு மகளும், இரு மகன்களும் இருக்கிறார்கள்.

எட்டாம் வகுப்புவரை படித்த திரு செல்வம் இந்த நிறுவனத்தில் ஆறு ஆண்டுகளாக பளுதூக்கும் இயந்திரத்தை இயக்குபவராக இருக்கிறார். பணம் நிறுவனத்திற்குதான் உரியது என்று தொடக்கத்தில் அதை இவர் ஏற்க மறுத்துள்ளார்.

"இந்திய மதிப்பில் இது கிட்டத்தட்ட 12 லட்சம். நான் கனவில்கூட நினைக்காத ஒன்று. வறுமையில் சிக்கித் தவித்த எனக்கு கடவுள் அளித்த உதவி," என்ற செல்வத்தின் கண்களின் ஓரத்தில் நீர் எட்டிப் பார்த்தது.

குறிப்புச் சொற்கள்
வெளிநாட்டு ஊழியர்தமிழ்நாடு