திரு போப் ராஜுக்கு நினைவஞ்சலிக் கூட்டம்

1 mins read
0b1742b8-6b8a-438e-998b-471ac85e396e
மறைந்த ஜோஸ்கோ பயண நிறுவன உரிமையாளர் நாகை திரு. இரா. தங்கராசு (எ) போப் ராஜுக்கு தமிழ் அமைப்புகள் இணைந்து நினைவஞ்சலிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன.  - படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

அண்மையில் மறைந்த தமிழ் வள்ளல், தமிழ்த் தொண்டர் என்னும் பட்டங்களைப் பெற்ற ஜோஸ்கோ பயண நிறுவன உரிமையாளர் நாகை திரு. இரா. தங்கராசு (எ) போப் ராஜுக்கு தமிழ் அமைப்புகள் இணைந்து நினைவஞ்சலிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 26ஆம் தேதி காலை 10 மணிக்கு 95 சையது ஆல்வி சாலை, சிங்கப்பூர் 207671 என்ற முகவரியில் அமைந்துள்ள ஆனந்த பவன் உணவகத்தின் மேல் மாடியில் கூட்டம் நடைபெறும்.

தங்க மனம் படைத்த தங்கராசுக்கு அஞ்சலி செலுத்த வருமாறு அன்புடன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ள தமிழர் பேரவை, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், கவிமாலை, சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம், மக்கள் கவிஞர் மன்றம் ஆகிய அமைப்புகள் அழைக்கின்றன.

நினைவஞ்சலிக் கூட்டத்தில் திரு. போப் ராஜுக்கு நெருக்கமான உள்நாட்டு, வெளிநாட்டு நண்பர்களின் இரங்கலுரைகள், இரங்கல் கவிதைகளுடன் அவர் சிங்கப்பூரில் கலந்துகொண்ட சில நிகழ்ச்சிகளின் படவில்லைக் காட்சியும் இடம்பெறும்.

மதிய உணவுடன் நிகழ்ச்சி நிறைவுறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் விவரங்களுக்கு நா. ஆண்டியப்பன்-97849105, கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ-81316437 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்