புதிய இடத்தில் சனிக்கிழமைகளிலும் திருமணப் பதிவு

புதிய இடத்தில் சனிக்கிழமைகளிலும் திருமணப் பதிவு

2 mins read
f291bc0a-2ea0-4933-aa10-196912529a47
மே 17 முதல், சிவில் திருமணங்களுக்கான சனிக்கிழமை விழாக்கள் காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரையிலும், பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெறும் - படம்: ஸட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

மே 17ஆம் தேதி முதல் எஸ்பிளனேட் மால் கடைத்தொகுதியில், சனிக்கிழமைகளிலும் தம்பதிகள் தங்கள் சிவில் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம். அக்டோபர் முதல் முஸ்லிம் திருமணங்களை அதே இடத்தில் நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 14ஆம் தேதி எஸ்பிளனேட் மால் கடைத்தொகுதியில் திருமணப் பதிவகம் (ஆர்ஓஎம்) மற்றும் முஸ்லிம் திருமணப் பதிவகம் (ஆர்ஓஎம்எம்) இரண்டும் செயல்படத் தொடங்கும் வேளையில், தற்போதைய கேனிங் ரைஸ் வளாகம் மறுசீரமைப்பு செய்யப்படும். எஸ்பிளனேட் மால் கடைத்தொகுதியின் மூன்றாவது மாடியில் முன்பு library@esplanade இருந்த இடத்தில் இந்த இரண்டு திருமணப் பதிவகங்கள் செயல்படும்.

தம்பதிகள் வார இறுதியில் விழாக்களை நடத்த விரும்புவதாகக் கூறியதைத் தொடர்ந்து, இந்த இடைக்கால ஏற்பாடாக இந்த இடத்தில் சனிக்கிழமைகளிலும் திருமணங்களை நடத்தும் தெரிவு அறிமுகப்படுத்தப்பட்டது என்று ஏப்ரல் 14ஆம் தேதி சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும், கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சும் வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் கூறின. இதனால் அந்த விழாக்களில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் கலந்துகொள்ளலாம்.

மே 17 முதல், சிவில் திருமணங்களுக்கான சனிக்கிழமை நிகழ்வுகள் காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரையிலும், பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெறும். தம்பதிகள் ஏப்ரல் 14 முதல் ‘அவர் மேரேஜ் ஜெர்னி’ (Our Marriage Journey) எனும் இணையவாசல் மூலம் தங்களுக்கு விருப்பமான நேரங்களை ஆறு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம்.

அக்டோபர் முதல் முஸ்லிம் திருமண விழாக்களுக்கு சனிக்கிழமைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நேரங்கள் உள்ளன. தம்பதிகள் தங்கள் விழாக்களுக்கு ‘அவர் மேரேஜ் ஜெர்னி’ இணையவாசலைப் பார்க்க வேண்டும். மேலும் அவர்களின் விழாக்களுக்கு பள்ளிவாசல்கள் போன்ற சமூக இடங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மறுசீரமைப்புவளாகம்முஸ்லிம்