13 ஆண்டுகளுக்குமுன் வெளிநாட்டவர் கொலை; சிங்கப்பூரர்மீது கொலைக் குற்றச்சாட்டு

13 ஆண்டுகளுக்குமுன் வெளிநாட்டவர் கொலை; சிங்கப்பூரர்மீது கொலைக் குற்றச்சாட்டு

1 mins read
30521c0a-d540-4d03-9b82-02822b3efb2d
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

சிங்கப்பூரில் 2010ஆம் ஆண்டு வெளிநாட்டு ஆடவர் ஒருவரைக் கொலை செய்துவிட்டு நாட்டைவிட்டுத் தப்பிச் சென்ற சந்தேகத்தின் பேரில் சிங்கப்பூரர் லீ ஹெங் வோங் கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.

53 வயதான லீ, 2010 பிப்ரவரி 14ஆம் தேதி கேலாங் ரோட்டில் 23 வயது சீ வெய் ஃபெங்கைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஃபெங்கின் மரணம் பின்னிரவு 2 மணிக்கும் காலை 6:29 மணிக்கும் இடையில் நிகழ்ந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

லீ எப்படி அல்லது எங்கு கைது செய்யப்பட்டார் என்பது குறித்த விவரங்களை நீதிமன்றம் வெளியிடவில்லை.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி லீமீது கொலைக் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டது.

வழக்கு விசாரணை ஜுன் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உண்டு.

குறிப்புச் சொற்கள்
வழக்குசிங்கப்பூர்நீதிமன்றம்