ஆடையின்றி, ரத்தக் காயங்களுடன் ஜாலான் புசாரில் ஓடிய ஆடவர்

1 mins read
633efe35-c549-4a91-abc0-30589864407b
(இடது படம்) 44 வயது ஆடவர், பெண்டிமியர் சாலையிலிருந்து ஆடையின்றி 1.5 கிலோ மீட்டர் தூரம் ஓடி ஜாலான் புசாரை அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. (வலது படம்) அந்த ஆடவரை டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர் சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். - படங்கள்: ஷின் மின்

அக்டோபர் மாதம் 29ஆம் தேதியன்று ஆடவர் ஒருவர் ஆடையின்றி ரத்தக் காயங்களுடன் கிட்டத்தட்ட 1.5 கிலோ மீட்டர் தூரம் ஓடி ஜாலான் புசாரை அடைந்தார்.

அதற்கு முன்னதாக அந்த 44 வயது ஆடவர், ஆடையின்றி மோட்டார் சைக்கிள் ஓட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், டாக்சி மீது மோதி விபத்துக்குள்ளானது.

பெண்டிமியர் சாலையில் விபத்து நிகழ்ந்ததாகக் காலை 11 மணி அளவில் தகவல் கிடைத்தது என்று காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் ஸ்டோம்ப் செய்தித்தளத்திடம் தெரிவித்தன.

விபத்து நிகழ்ந்த பிறகு, அந்த ஆடவர் அங்கிருந்து 1.5 கிலோ மீட்டர் தூரம் ஓடி ஜாலான் புசாரை அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர் கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு ஆடையின்றி, ரத்தக் காயங்களுடன் ஓடியதாக அதிகாரிகள் கூறினர்.

அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அப்போது அவர் சுயநினைவுடன் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

அவர் ஆடையின்றி இருந்ததற்கான காரணம் குறித்து தகவல் இல்லை.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்