பணம் கையாடிய ஆடவருக்குச் சிறை

பணம் கையாடிய ஆடவருக்குச் சிறை

1 mins read
8b2ecab8-77df-4ba5-ba4f-443189c58989
200க்கும் மேற்பட்டோரிடமிருந்து 58 வயது சுவாண்டி மார்சுக்கி ஏறத்தாழ $470,000 கையாடியதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

இஸ்லாமியர்கள் சவூதி அரேபியாவில் உள்ள மக்காவுக்கு யாத்திரை மேற்கொள்ள பெறப்பட்ட பணத்தைக் கையாடிய ஆடவருக்கு மூன்றரை ஆண்டுகள், நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

200க்கும் மேற்பட்டோரிடமிருந்து 58 வயது சுவாண்டி மார்சுக்கி ஏறத்தாழ $470,000 கையாடியதாகத் தெரிவிக்கப்பட்டது.

யாத்திரைக்கான ஏற்பாடுகள் குறித்து பணம் செலுத்தியோருக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

பணம் செலுத்தியவர்கள் 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாத்திரை மேற்கொள்ளவிருந்தனர்.

ஆனால், யாத்திரைக்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவர்களுக்குத் தெரியவந்தது.

சுவாண்டி மீது நம்பிக்கைத் துரோகம் செய்தல் மற்றும் நொடித்துப்போன நிலையிலும் 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பில் ஹிக்மா கன்சல்ட்டன்ஸ் நிறுவனத்தின் மேலாளராகச் செயல்பட்டதற்காகக் குற்றம் சுமத்தப்பட்டது.

அவர் குற்றவாளி என்று 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது.

உரிமம் இல்லாமல் வர்த்தக முகவைக்கு உதவி செய்த குற்றத்தையும் அவர் புரிந்ததாக நீதிமன்றம் தெரிவித்தது.

தமது 88 வயது தாயாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருடன் கடைசியாக நோன்புப் பெருநாள் கொண்டாடிவிட்டு சிறைக்குச் செல்ல நீதிமன்றத்திடம் சுவாண்டி அனுமதி கேட்டார்.

அவருக்கு $20,000 பிணை வழங்கப்பட்டது.

சுவாண்டி தமது சிறைத் தண்டனையை மார்ச் மாதம் 23ஆம் தேதி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்