பிப்ரவரி 27ல் ஏ-நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

பிப்ரவரி 27ல் ஏ-நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

2 mins read
7f0cdbd5-56e4-4fa5-9360-1e57349530fe
தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் பற்றிய தகவல்களை அந்தந்தப் பள்ளிகள் வழங்கும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சென்ற 2025ஆம் ஆண்டு மேல்நிலைத் தேர்வுகளை (A-level) எழுதிய மாணவர்கள் பிப்ரவரி 27ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்குத் தங்கள் பள்ளிகளிலிருந்து முடிவுகளைப் பெறுவர்.

தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் பற்றிய தகவல்களை அந்தந்தப் பள்ளிகள் வழங்கும் என்று கல்வி அமைச்சும் சிங்கப்பூர்த் தேர்வு, மதிப்பீட்டுக் கழகமும் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 20) தெரிவித்தன.

பிப்ரவரி 27, பிற்பகல் 3.15 மணி முதல் மார்ச் 13, இரவு 11 மணிவரை, தேர்வு முடிவுகள் seab.gov.sg எனும் கழகத்தின் இணையவாசலிலும் இடம்பெறும். மாணவர்கள் தங்கள் சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்தி அந்த இணையவாசலுக்குச் செல்லலாம்.

அனைத்துலக மாணவர்கள் பிப்ரவரி 25ஆம் தேதியிலிருந்து மின்னஞ்சல்வழி தங்கள் பயனர் பெயரைப் பெற்றுக்கொள்வார்கள்.

பள்ளி மாணவர்கள் தங்கள் சார்பாகத் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஒருவரை நியமிக்கலாம். அடையாளத்தை உறுதிப்படுத்த, அந்த நபர் தகுந்த ஆவணங்களைக் காட்டவேண்டும். அத்தகைய ஒருவரை நியமிக்க முடியாதோர், உதவிக்காகத் தங்கள் பள்ளியை அணுகலாம்.

தனியார் மாணவர்கள் தங்கள் சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்தி, பிப்ரவரி 27ஆம் தேதி, பிற்பகல் 3.15 மணியிலிருந்து இணையவாசலில் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

தன்னாட்சிப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், பல்கலைக்கழகங்களின் இணையத்தளங்கள்வழி தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவேண்டும். அதற்கு, மேல்நிலைத் தேர்வுக்கான சான்றிதழ் தேவைப்படாது.

ஒவ்வொரு தன்னாட்சிப் பள்ளிக்கான நுழைவுத் தகுதிமுறைகள் குறித்த தகவல்கள் பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தில் இடம்பெற்றிருக்கும். மேலும் உதவி தேவைப்படும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்