சட்ட அமைச்சர் எட்வின் டோங் இந்தியா பயணம்

சட்ட அமைச்சர் எட்வின் டோங் இந்தியா பயணம்

1 mins read
6a0e7d7b-98f6-415d-8e90-16b11d4647d3
சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
Google News Preferred Icon

சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங், நவம்பர் 21ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை இந்தியாவுக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்கிறார்.

மும்பையில், அமைச்சர் டோங், சிங்கப்பூர் அனைத்துலக நடுவர் மைய (எஸ்ஐஏசி) மும்பை மாநாட்டில் கலந்துகொள்வார். மேலும் எஸ்ஐஏசி நடுவர் மன்றத்தின் தலைவர் லூசி ரீட், எஸ்ஐஏசி நடுவர் மன்ற உறுப்பினர் டேரியஸ் ஜே. கம்பாட்டா ஆகியோருடன் ஒரு நேரடி உரையாடலில் பங்கேற்பார்.

கொள்கை, நடைமுறை மற்றும் வர்த்தகக் கண்ணோட்டங்களிலிருந்து அனைத்துலக நடுவர் மன்றத்தின் மாறிவரும் போக்கு குறித்து அவர்கள் விவாதிப்பார்கள்.

அமைச்சர் டோங், பின்னர் எஸ்ஐஏசி டெல்லி மாநாட்டிற்காக புதுடெல்லிக்குச் சென்று, அங்கு முக்கிய உரை நிகழ்த்துவார்.

புதுடெல்லியில், சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான சட்ட ஒத்துழைப்பையும், சாத்தியமான கூட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்கான பொதுவான ஆர்வத்தையும் மீண்டும் உறுதிப்படுத்த அமைச்சர் டோங் இந்தியாவின் சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலைச் சந்திப்பார்.

அமைச்சர் டோங்குடன் சட்ட அமைச்சின் அதிகாரிகளும் சென்றுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்