ஜெஃப்ரி சியாவ்: வருவாய் ஈட்டுவதே தெமாசெக் நிறுவனத்தின் நோக்கம்

ஜெஃப்ரி சியாவ்: வருவாய் ஈட்டுவதே தெமாசெக் நிறுவனத்தின் நோக்கம்

1 mins read
ac164f4a-b923-4a6f-9e00-eba4ddbe233e
பொருளியல் வளர்ச்சி, வேலை உருவாக்கம் போன்றவற்றுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமே தவிர, தெமாசெக் வழிநடத்தக் கூடாது என்றும் மூத்த துணையமைச்சர் ஜெஃப்ரி சியாவ் கூறினார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

தரமான, நீடித்த நீண்ட கால வருவாயை ஈட்டுவதை இலக்காகக் கொண்டுள்ள தெமாசெக், வர்த்தக அடிப்படையில் செயல்பட்டு அதிகப்படியான வருவாயை ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று நிதித் துறைக்கான மூத்த துணையமைச்சர் ஜெஃப்ரி சியாவ் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி, ஓய்வுபெற்றவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தத் தெமாசெக் நிறுவனத்தின் அனைத்துலக முதலீட்டைப் பயன்படுத்தலாமா என்ற அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் லாயின் கேள்விக்குப் பதிலளித்தபோது திரு சியாவ் அவ்வாறு கூறினார்.

பொருளியல் வளர்ச்சி, வேலை உருவாக்கம் போன்றவற்றுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டுமே தவிர, தெமாசெக் அவற்றை வழிநடத்தக் கூடாது என்று  நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) நடந்த அமைச்சுகளுக்கான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது அவர் கூறினார்.

“தெமாசெக் நிறுவனம் வர்த்தக அடிப்படையில் செயல்பட்டு அதிகப் பணத்தை ஈட்ட வேண்டும் என விரும்புகிறோம். எனவே, குறிப்பிட்ட துறைகளில் முதலீடு செய்ய அரசாங்கம் தெமாசெக் நிறுவனத்தைப் பணிக்காது. அத்துடன் தெமாசெக்கின் தனிப்பட்ட முதலீட்டு முடிவுகளை அரசாங்கம் நிர்ணயிக்காது,” என்றார் திரு சியாவ்.

வரிக் கட்டமைப்பு குறித்துக் கேட்கப்பட்டபோது திரு சியாவ், இங்கு பணியாற்றுபவர்களில் மூவரில் ஒருவர் தனிப்பட்ட வருமான வரி எதையும் செலுத்துவதில்லை எனத் தெரிவித்தார்.

வரி செலுத்துபவர்களில் பத்தில் எட்டுப் பேர் 6 விழுக்காட்டுக்கும் குறைந்த வரி விகிதத்தைக் கொண்டுள்ளனர் என்பதையும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
தெமாசெக்வருவாய்நிறுவனம்வர்த்தகம்