சிங்கப்பூரில் இட்டாச்சோ சுஷி (Itacho Sushi) உணவகங்கள் மூடல்

சிங்கப்பூரில் இட்டாச்சோ சுஷி (Itacho Sushi) உணவகங்கள் மூடல்

1 mins read
337f5ec0-a247-4aef-9866-9a5fd59064f1
கைமுறை சுஷி வகைகளுக்குப் புகழ்பெற்ற  இட்டாச்சோ சுஷி உணவகச் சங்கிலி சிங்கப்பூர் 2009ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. - படம்: கூகல் வரைபடத்திலிருந்து எடுக்கப்பட்டது
Google News Preferred Icon

புகழ்பெற்ற ஜப்பானிய உணவகச் சங்கிலியான இட்டாச்சோ சுஷி (Itacho Sushi), சிங்கப்பூரில் தனது அனைத்து கிளைகளையும் மூடியுள்ளது.

கடந்த ஓராண்டில் படிப்படியாகக் கிளைகள் மூடப்பட்டு வந்த நிலையில், மார்ச் 15 நிலவரப்படி கூகல் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அயோன் ஆர்ச்சர்ட், புகிஸ் ஜங்ஷன், த ஸ்டார் விஸ்தா, நொவீனா ஸ்குவேர் 2 ஆகிய இடங்களில் செயல்பட்ட கடைசி நான்கு கிளைகளும் ‘நிரந்தரமாக மூடப்பட்டதாக’ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவித்தது.

தற்போது நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம், சமூக வலைத்தளப் பக்கங்கள், கைப்பேசிச் செயலி ஆகியவையும் செயல்பாட்டில் இல்லை. சிங்கப்பூரில் இதனை நடத்தி வந்த ‘இட்டாச்சோ பிஎம்’ நிறுவனம், கணக்கியல், நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்தின் (ஆக்ரா) பதிவேட்டில் இருந்து நீக்கப்படுவதற்கான அரசாங்க அறிவிப்பு கடந்த பிப்ரவரி 13 அன்று வெளியிடப்பட்டது.

கடந்த 2009ஆம் ஆண்டு சிங்கப்பூரில் கால்பதித்த இந்த நிறுவனம், கைமுறை சுஷி (Handmade Sushi) வகைகளுக்குப் புகழ்பெற்றது. 2024ஆம் ஆண்டின் இறுதியில், இதன் நிறுவனர் ரிக்கி செங் காலமானதைத் தொடர்ந்து, ஹாங்காங்கில் இருந்த கிளைகளும் மூடப்பட்டன.

குறிப்புச் சொற்கள்