எதிர்பாராமல் இடித்த சிறுமியைச் சுவற்றில் தள்ளிய பெண்ணுக்குச் சிறை

எதிர்பாராமல் இடித்த சிறுமியைச் சுவற்றில் தள்ளிய பெண்ணுக்குச் சிறை

1 mins read
நெரிசலின்போது எதிர்பாராமல் இடித்துக்கொள்வது வழக்கமானது: நீதிமன்றம்
c4a47ef6-dd83-470c-8a38-f74263d5478b
சிங்கப்பூர் நீதிமன்ற வளாகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எம்ஆர்டி நிலையத் தளமேடையில் எதிர்பாராமல் மோதிய எட்டு வயதுச் சிறுமியைச் சுவரில் தள்ளிய 44 வயது மாதுக்கு திங்கட்கிழமை (மே 25) ஐந்து நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

போனா விஸ்தா எம்ஆர்டி நிலையத்தில் 2025ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி, காலை 9 மணியளவில் சம்பவம் நிகழ்ந்தது.

கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தபோது, தமது தாயாருடன் முன்னோக்கி நடந்துகொண்டிருந்த அச் சிறுமி வழியில் ஹோ ஹுய் லிங் என்ற அந்த மாதை லேசாக மோதிவிட்டார்.

அதனால் கோபமடைந்த ஹோ, அச்சிறுமியை துரத்திச் சென்று, மிகவேகமாக அருகில் இருந்த சுவரின்மீது வலுக்கட்டாயமாகத் தள்ளியுள்ளார். இதில் பள்ளிச் சீறுடை அணிந்திருந்த அச்சிறுமிக்குத் தலையிலும் தோளிலும் பலத்த வலி ஏற்பட்டு அவர் அழத் தொடங்கினார்.

மன்னிப்பு கேட்காத மாது

அச்செயலுக்கு மன்னிப்பு கோராமல், அம்மாது சிறுமியின் தாயிடம் “அவள் என்னைத் தள்ளினாள் ஆகவே அவளை நான் தள்ளினேன்” என்று கூறிச் சென்றதாக அரசாங்க வழக்கறிஞர் நீதிமன்ற ஆவணத்தில் தெரிவித்தார்.

சிறுமிக்கு எதிராக முரட்டுத்தனமாக செயல் புரிந்த குற்றச்சாட்டு ஹோ மீது சுமத்தப்பட்டது.

எம்ஆர்டி நிலையங்களில் கூட்ட நெரிசலின்போது ஒருவர்மீது ஒருவர் எதிர்பாராமல் இடித்துக்கொள்வது என்பது வழக்கமாக நடக்கக்கூடியதுதான் எனவும் சிறுமியை ஹோ அவ்வாறு செய்தது ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அரசாங்க வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்