காவல்துறையினருக்கு லஞ்சம் தர முயன்ற இந்திய நாட்டவர் மீது குற்றச்சாட்டு

காவல்துறையினருக்கு லஞ்சம் தர முயன்ற இந்திய நாட்டவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
ecfab929-494c-4c64-90aa-23dc0d353629
ராஜா கோபால் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

மதுஅருந்திவிட்டு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதுடன், காவல் அதிகாரியிடம் லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றத்திற்காக 38 வயது இந்திய நாட்டவரான ராஜா கோபால் சரவணகுமார் என்பவர் மீது வெள்ளிக்கிழமை (ஜூலை 31) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த ஜூன் 17ஆம் தேதி நடந்த அச்சம்பவத்தின்போது, சாலைப் போக்குவரத்து விதியை மீறியதற்காகத் தம் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்காமல் இருக்க, காவல்துறை அதிகாரி முகமது நூர் ஹஸ்ரத் முகமது ஹசிமிடம் தொகையைக் குறிப்பிடாமல் லஞ்சம் கொடுக்க முயன்றதாக லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு (சிபிஐபி) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

லஞ்சப் பணத்தை உடனடியாக நிராகரித்த காவல்துறை அதிகாரி விவகாரத்தை சிபிஐபியிடம் ஒப்படைத்தார்.

ராஜா கோபால் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஊழல் விவகாரங்களில் கண்டிப்பான கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் $100,000 வரை அபராதம், ஐந்து ஆண்டுகள்வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வெளிநாட்டு ஊழியர்இந்தியாலஞ்சம்ஊழல்ஊழல் தடுப்பு ஆணையம்