மூத்தோரிடையே அதிகரிக்கும் திறன்பேசி பயன்பாடு

மூத்தோரிடையே அதிகரிக்கும் திறன்பேசி பயன்பாடு

2 mins read
22c04d9c-46fe-4f40-b322-9ef465128b9d
திறன்பேசிகளை அதிகமாகப் பயன்படுத்தும் மூத்தோரின் எண்ணிக்கை 41லிருந்து 60 விழுக்காடு அதிகரித்துள்ளது. - படம்: ஐஸ்டோக்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் உள்ள மூத்தோரிடையே திறன்பேசிகளை மணிக்கணக்காகப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. திறன்பேசியும் கையுமாக இருக்கும் இளையர்களைப் பார்ப்பது வழக்கம். இப்போது மூத்தோரிடமும் அதே போக்குத் தென்படுகிறது.

தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் 2020ஆம் ஆண்டு தகவல், தொடர்புப் பயன்பாடு குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

2019ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் அதாவது கொவிட்-19 பெருந்தொற்றின் காலகட்டத்தில் 75 வயதுக்கும் மேற்பட்ட மூத்தோரிடையே திறன்பேசிகளின் பயன்பாடு 41 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடுவரை அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது.

2023ஆம் ஆண்டுக்குள் மூத்தோரில் கிட்டத்தட்ட 89 விழுக்காட்டினர் திறன்பேசிகளை வைத்திருந்ததாகத் தகவல், தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது. வாழ்க்கையை எளிமையாக்க மூத்தோருக்கு அறிமுகம் செய்யப்பட்ட திறன்பேசிகள் இன்று அவர்கள் அடிக்கடி நாடும் உற்றத் தோழனாக மாறிவிட்டது.

அதன் காரணமாக, மூத்தோர் பலர் தனிமையில் வாடுகின்றனரா? ஆரோக்கியமாக இருக்கின்றனரா? மின்னிலக்கப் பயன்பாடு மூப்படைதலை எவ்வாறு மாற்றுகிறது? போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

சிங்கப்பூரில் பல பொதுச் சேவைகளைப் பெற திறன்பேசிகள் இன்று இன்றியமையாத ஓர் இடத்தைப் பெற்றுவிட்டன. தகவல்களைப் பெறுதல், பரிவர்த்தனைகள் செய்தல் போன்ற பலவற்றுக்குத் திறன்பேசிகள் தேவைப்படுகின்றன.

மருத்துவரைச் சந்திப்பதற்கான நேரத்தைப் பதிவுசெய்ய, கட்டணங்களைச் செலுத்த, பொதுப் போக்குவரத்துத் தொடர்பான தகவல்களைப் பெற என்று பல்வேறு தேவைகளுக்கு மூத்தோர் திறன்பேசிகளை அதிகம் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், காலப்போக்கில் பல வசதிகளைத் தந்த திறன்பேசிகள் மூத்தோரின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருப்பதை நிபுணர்கள் கண்டறிந்தனர்.

2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 2022ஆம் ஆண்டு ஜூலை வரை 6,509 பேரிடமிருந்து ஆய்வாளர்கள் கருத்துத் திரட்டினர். அவர்கள் 15லிருந்து 65 வயதுக்கு இடைப்பட்டவர்கள். சிங்கப்பூரர்களின் பழக்கங்களைக் கண்டறிய ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் மூன்றில் ஒரு சிங்கப்பூரர் திறன்பேசி பயன்பாட்டல் மனத்தளவில் பாதிப்புகளை எதிர்கொள்வதாகப் பதிவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்