கணவரைக் கத்தியுடன் மிரட்டிய மனைவிக்குச் சிறை

கணவரைக் கத்தியுடன் மிரட்டிய மனைவிக்குச் சிறை

1 mins read
45b35431-2a58-4d99-8616-09f59b2ae194
லு உட் எம்மிற்கு மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

தம்மைக் கோபக்காரி என்று நீதிமன்றத்தில் வருணித்த மாது ஒருவருக்கு மார்ச் 14ஆம் தேதி மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் தம் இளம் குழந்தைகளின் முன்னால், தமது கணவரைக் கத்தியுடன் மிரட்டியதே அதற்குக் காரணம். இந்தச் சம்பவம் சென்ற ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி நடந்தது.

முப்பத்து மூன்று வயதான லு உட் எம்மிற்கு $2,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

வியட்நாமைச் சேர்ந்த அந்த மாது தாம் தடுத்துவைக்கப்பட்ட இடத்திலிருந்து காணொளி இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

லு, 61 வயது சிங்கப்பூரரைத் திருமணம் செய்துகொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

டிசம்பர் 2ஆம் தேதியன்று லு, அவரது கணவருடனும் மற்ற உறவினர்களுடனும் வீட்டில் இருந்தார்.

கணவருடன் கோபமடைந்த லு, சமையலறைக் கத்தியை எடுத்துக்கொண்டு தொடர்ந்து அவரைப் பார்த்துக் கத்திக்கொண்டிருந்தார்.

ஒரு சமயம் அவர் கத்தியை உயர்த்தி கணவரை மிரட்டினார்.

சம்பவ இடத்தைச் சென்றடைந்த காவல்துறையினர் அவரைக் கைதுசெய்தனர்.

குறிப்புச் சொற்கள்
காவல்துறைமனைவி