வேலை வாய்ப்புகளையும் ஊதிய உயர்வையும் அரசாங்கம் கண்காணிக்கும்

‘ஏஐ’ முன்னெடுப்புகளின் குறீயீடுகளாக இவை கண்காணிக்கப்படும்: அமைச்சர் ஜோசஃபின் டியோ

வேலை வாய்ப்புகளையும் ஊதிய உயர்வையும் அரசாங்கம் கண்காணிக்கும்

1 mins read
0fe590af-c5ae-4a59-8e10-195c4c799cf6
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சின் ‘ஏஐ’ முன்னெடுப்புகள், இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களிடம் பேசினார் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தேசியச் செயற்கை நுண்ணறிவுப் பயன்விளைவுத் திட்டம் முன்னெடுக்கப்படும் வேளையில், நிலையான வேலை வாய்ப்புகள், ஊதிய உயர்வு ஆகியவற்றை முக்கியக் குறியீடாக அரசாங்கம் கண்காணிக்கும் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியுள்ளார்.

பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பது, திறம்படப் பணியாற்ற ஏதுவாக வேலைச் செயல்முறைகளை மறுவடிவமைப்பது ஆகியவற்றுக்காக ஊழியர்களுக்குச் செயற்கை நுண்ணறிவுத் திறன்களை வழங்க இத்திட்டம் அறிவிக்கப்பட்டது.

தேசியத் திட்டத்தின் வெற்றியை ஒரு குறியீட்டைக் கொண்டு அளவிடமுடியாது என்ற அமைச்சர் டியோ, “வேலைவாய்ப்பு விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறதா என்பதை அரசாங்கம் கண்காணிக்கும்,” என்றார்.

ஊழியர்கள் தங்கள் துறைகளில் தொடர்ந்து முன்னேறுவதற்கான வாய்ப்புகள் பெறுவதை அரசாங்கம் உறுதிசெய்யும் என்று அவர் கூறினார். அதில் ஊதிய உயர்வும் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

“ஊழியர்களிடையே செயற்கை நுண்ணறிவாற்றலை அதிகரிக்கும் இலக்கு பெரிதாக இருந்தாலும் அப்பாதையில் சவால்கள் இருக்கின்றன,” என்று திருமதி டியோ தெரிவித்தார்.

ஒவ்வொரு துறை வல்லுநர்களும் பெறவேண்டிய அடிப்படைத் திறனை நிர்ணயிப்பது ஒரு முக்கியச் சவாலாக இருக்கும்,” என்றார் அவர்.

“எடுத்துக்காட்டாக, ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற ஒருவருக்கு 5,000 சொற்கள் தெரிந்திருக்க வேண்டும். இது மொழிக்கேற்ப மாறுபடுவதுபோல, அடிப்படைச் செயற்கை நுண்ணறிவுத் திறன் அடிப்படைத் தேவையையும் துறையையும் பொறுத்து மாறுபடும்,” என்பதையும் சுட்டினார் அமைச்சர் டியோ.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுவேலைவாய்ப்புபணிஊழியரணி