ஓய்வுக்காலத்திற்கு ஆயத்தமாக ஆதரவு

ஓய்வுக்காலத்திற்கு ஆயத்தமாக ஆதரவு

1 mins read
afb5eb29-9f91-496f-867a-364ce3eb50ee
நீண்டகாலப் பராமரிப்பு ஆதரவு நிதியில் $400 மில்லியன் நிரப்பப்படும்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் மூப்படையும் மக்கள்தொகை அதிகரித்து வரும் வேளையில், மூத்தோருக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தமது வரவுசெலவுத் திட்ட உரையில் கூறினார்.

முதலில், முதியோரின் நீண்டகாலப் பராமரிப்பு ஆதரவு நிதியில் $400 மில்லியன் நிரப்படும்.

மசேநிதி ஓய்வுக்காலச் சேமிப்புகளை, அடிப்படை ஓய்வுத்தொகையைவிட குறைவாக வைத்திருக்கும் 50 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களுக்கு அரசாங்கம் $1,500 வரை கூடுதல் மத்திய சேமநிதி (மசேநிதி) நிரப்புதொகையை வழங்கும்.

குறைந்த தொகை உள்ளவர்களுக்கு அதிக நிரப்புதொகை கிடைக்கும். நிரப்புதொகை அவர்களுடைய வீட்டின் ஆண்டு மதிப்பு அடிப்படையிலும் வழங்கப்படும்.

இரண்டாவதாக, 55லிருந்து 65 வயதுக்கு மேல் இருக்கும் மூத்த ஊழியர்களின் அடுத்தகட்ட சந்தா உயர்வு 2027ல் நடப்புக்கு வரும்.

மூத்த ஊழியர்கள் ஓய்வுக்காலத்திற்கு அதிகம் சேமித்து வைக்க, மசேநிதி சந்தா விகித உயர்வு அவர்களின் ஓய்வுக்கணக்கில் முழுமையாக ஒதுக்கப்படும். ஓய்வுக்கால முழுத்தொகையை ஏற்கெனவே ஒதுக்கி வைத்துள்ளவர்களுக்கு அந்த உயர்வு சாதாரணக் கணக்கில் சேரும்.

இதனால், அதிகரிக்கும் வனிகச் செலவுகளைக் குறைக்க, அரசாங்கம் நிறுவனங்களுக்கு ஓராண்டு மத்திய சேமநிதி சந்தாத் தொகை அதிகரிப்பிற்கான கழிவுகளை வழங்கும்.

குறிப்புச் சொற்கள்