அரசு ஊழியர்கள் தளராமல் துணிவுடன் தீர்வுகளைத் தேடவேண்டும்: அமைச்சர் சீ

அரசு ஊழியர்கள் தளராமல் துணிவுடன் தீர்வுகளைத் தேடவேண்டும்: அமைச்சர் சீ

2 mins read
உரிய அனுமதியுடன், மாற்று வழிமுறைகளை நடைமுறைப்படுத்தலாம்
f26bfecf-430b-47a4-854b-c6b1f3faf740
தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக கலாசார மையத்தில் நடந்த விழாவில் உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

சிங்கப்பூர் அரசின் பொதுச் சேவையில் பணியாற்றும் அதிகாரிகள், அவர்களது கடமைகளை ஆற்றும்போது எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஏற்ற தீர்வுகளைக் கண்டறிய துணிச்சலுடன் செயலாற்ற வேண்டும் என தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் கேட்டுக்கொண்டார்.

செவ்வாய்க்கிழமை (மே 19) சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகக் கலாசார மையத்தில் நடந்த பொதுச் சேவை அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல் (எஸ்டிஇ) விழாவில் கலந்துகொண்ட 1,200 அரசாங்கப் பொதுச் சேவை ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் சீ உரையாற்றினார்.

பொதுச்சேவை ஊழியர்கள் சில நேரங்களில் வழக்கத்துக்கு மாறான முடிவுகளை எடுக்கத் தயங்கக்கூடாது என்று அவர் கூறினார். நாட்டின் நலனை முன்வைத்து விதிமுறைகளை மாற்றியமைக்கும் துணிச்சலை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.

ஆரம்பத்தில் தீர்வுக்கான விடைகள் உடனடியாகக் கிடைக்கவில்லை என்ற எண்ணத்தையும் மற்றொருவர் நமக்குத் தடைகள் ஏற்படுத்துவார் என்ற நினைப்பையும் தவிர்க்கவேண்டும் எனவும் அமைச்சர் சீ அவரது உரையில் விளக்கினார்.

அரசாங்க ஊழியர்கள் ஒரே விதமாகச் செயல்படக்கூடிய இயந்திரத்தின் பாகங்கள் அல்ல என்பதை முதலில் அவர்கள் உணரவேண்டும். சிறந்த திட்டத்தைச் செயல்படுத்த நடைமுறைகள் அனுமதிக்காத சூழலில், அவற்றை மாற்றியமைத்து புதிய வழிமுறைகளை சோதித்துப் பார்க்கவேண்டும்,” என அமைச்சர் சீ ஊக்கம் அளித்தார்.

மிகவும் கடினமான பிரச்சினைகளைக் கையாளும்போது முதலில் மனம் தளராமல், அப்பிரச்சினை ஒருவரை முழுவதும் சூழ்ந்து அவர் பின்தங்கிவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றார் திரு சீ.

அரசின் பங்காளிகளுடன் ஒருங்கிணைதல்

மாறுபட்ட கண்ணோட்டங்களை வழங்கக்கூடிய பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுவதை அவர்கள் வரவேற்க வேண்டும் எனவும் அமைச்சர் கருத்துரைத்தார்.

உரிய அனுமதியுடன், மாற்று வழிமுறைகளை நடைமுறைப்படுத்த கூடுதல் நிதியுதவி, மனிதவளம் ஆகியவற்றைக் கேட்டுப் பெறலாம் என்பதையும் அமைச்சர் சீ குறிப்பிட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுச் சேவை ஊழியர்களுக்காக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்