ஆர்ச்சர்ட் ரோட்டில் தாக்கப்பட்ட சிறுமி; எழுவர் கைது

ஆர்ச்சர்ட் ரோட்டில் தாக்கப்பட்ட சிறுமி; எழுவர் கைது

1 mins read
94b858ce-0bd4-4e8a-b331-26012361fce2
‘த சென்டர்பாயிண்ட்’ வாகன நிறுத்துமிடத்தில் சிறுமி தாக்கப்பட்டார். படங்கள்: ஷின் மின் டெய்லி நியூஸ்  - படங்கள்: ஷின் மின் நாளிதழ்
Google News Preferred Icon

 ஆர்ச்சர்ட் ரோடு கார் நிறுத்துமிடத்தில் 14 வயதுச் சிறுமி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கலவரத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக 12 முதல் 17 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் எழுவர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மே 3 இரவு 10 மணிக்கு ‘த சென்டர்பாயிண்ட்’ (The Centrepoint) வாகன நிறுத்துமிடத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகச் சீன மொழி நாளிதழான ‘ஷின் மின் டெய்லி நியூஸ்’ தெரிவித்துள்ளது.

இரவு 11.25 மணியளவில் பிடோக் ரெசர்வாயர் ரோட்டில் உதவிக்கான அழைப்பு வந்ததாகக் காவல் துறையினரும், சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினரும் ஜூன் 4ல் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவரைக் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து அந்தச் சிறுமி ஒன்பது நாள்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக 14 வயதுச் சிறுமியின் தாயாரை மேற்கோள் காட்டி ஷின் மின் செய்தி வெளியிட்டது.

இணையத்தில் பரவி வரும் இக்காணொளியில், அந்தச் சிறுமி தரையில் கிடக்கும்போது உதைக்கப்படுவதும் குத்தப்படுவதும் பதிவாகியுள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்
ஆர்ச்சர்ட் ரோடுகைதுசிறுமிசிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை