மோசடி, சட்டவிரோதக் கடன்: இளையர் உட்பட 550 பேரிடம் விசாரணை

மோசடி, சட்டவிரோதக் கடன்: இளையர் உட்பட 550 பேரிடம் விசாரணை

1 mins read
80c8a59b-60a9-4379-8c37-7a3d3c365b1b
விசாரிக்கப்படுவோரில் 209 பெண்களும் உள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் நிகழ்ந்த 1,800க்கும் மேற்பட்ட மோசடிச் சம்பவங்கள் மற்றும் சட்டவிரோதக் கடன்கொடுக்கும் சம்பவங்கள் தொடர்பில் பதின்ம வயது இளையர் உட்பட 550 பேரைக் காவல்துறை விசாரித்து வருகிறது.

மேலும், அந்தச் சம்பவங்கள் தொடர்பாக ஜூன் 29 முதல் ஜூலை 8ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 46 பேரை பிடோக் காவல்துறைப் பிரிவு கைது செய்ததாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை (ஜூலை 10) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

விசாரிக்கப்பட்டு வரும் 550 பேரில் 209 பெண்களும் அடங்குவர்.

அந்த 550 பேரும் 16 வயதுக்கும் 83 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

வர்த்தக மோசடி, முதலீட்டு மோசடி, வேலை மோசடி, வாடகை மோசடி, கடன் தொடர்பான மோசடிகள் போன்றவற்றில் 418 பேர் ஈடுபட்டதாகக் காவல்துறை சந்தேகிக்கிறது.

அதுபோன்ற மோசடிகளில் பொதுமக்கள் $14.8 மில்லியனை இழந்துள்ளனர்.

உரிமமற்ற கடன்கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தில் இதர 132 பேரிடமும் விசாரணை நடைபெறுகிறது. அந்தச் சம்பவங்கள் $2.3 மில்லியன் பணப் பரிமாற்றம் தொடர்புடையவை.

குறிப்புச் சொற்கள்
மோசடிகடன்விசாரணை