‌குடியிருப்பு வட்டாரமாக மாறும் ஷூச்சின் உயர்நிலைப் பள்ளி இருந்த இடம்

‌குடியிருப்பு வட்டாரமாக மாறும் ஷூச்சின் உயர்நிலைப் பள்ளி இருந்த இடம்

1 mins read
acad9680-560c-47b7-95d1-5197833577cf
ஜூரோங் ஈஸ்ட் ஸ்திரீட் 21ல் ஷூச்சின் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தில் ‌ஷூச்சின் உயர்நிலைப் பள்ளி இருந்த நிலப்பகுதி புதிய வீடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அது புதிதாகக் கட்டப்படும் தோ குவான் ரயில் நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட 400 மீட்டர் தொலைவில் உள்ளது.

ஏப்ரல் 10ஆம் தேதி நகர மறுசீரமைப்பு ஆணையம், 2025 பெருந்திட்டத்தில் முன்னுரைக்கப்பட்ட பரிந்துரையை வெளியிட்டது. அதில் நிலப்பகுதியின் பரப்பளவை 5.0 விகிதத்துக்கு விரிவுபடுத்த பரிந்துரைக்கப்பட்டது.

குடியிருப்பு வட்டாரத்துக்காகத் தற்போது 3.5 விகித நிலபரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.

‌ஷூச்சின் உயர்நிலைப் பள்ளி இருந்த அந்த நிலப்பகுதி கிட்டத்தட்ட மூன்று ஹெக்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. அது ஏறக்குறைய நான்கு காற்பந்தாட்டத் திடல்களுக்குச் சமம்.

யூஹுவா தொடக்கப்பள்ளி, கிரெஸ் உயர்நிலைப் பள்ளி, யூஹுவா வில்லேஜ் சந்தை, உணவங்காடி நிலையம் ஆகியவற்றுக்கு அருகில் அந்த நிலப்பகுதி உள்ளது.

அங்கு 1,150லிருந்து 1,250 கழக வீடுகள் வரை கட்டப்படலாம் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். அல்லது 1,750லிருந்து 1,800 கூட்டுரிமை வீடுகள்வரை அமைக்கப்படலாம்.

துவாஸ், ஜூரோங் ஆகிய வட்டாரங்களில் வேலை செய்வோரைப் புதிய வீடுகள் ஈர்க்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

‌ஷூச்சின் உயர்நிலைப் பள்ளி 1925ஆம் ஆண்டு நிறுவப்பட்ட டுவான் செங் பொதுப் பள்ளியின் வேர்களிலிருந்து வந்தது.

1985ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டுவரை ஜூரோங் ஈஸ்ட்டில் பள்ளி செயல்பட்டது.

2019ஆம் ஆண்டு ‌‌ஷூச்சின் உயர்நிலைப் பள்ளி யூஹுவா உயர்நிலைப் பள்ளியுடன் இணைக்கப்பட்டது.

‌ஷூச்சின் பள்ளியின் வளாகம் பின்னர் கொவிட்-19 ஒருங்கிணைந்த பரிசோதனை, தடுப்பூசி நிலையமாகப் பயன்படுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்