தெங்காவின் முதல் தனியார் கூட்டுரிமை வீடுகளில் கிட்டத்தட்ட எல்லாம் விற்றுத் தீர்ந்தன

தெங்காவின் முதல் தனியார் கூட்டுரிமை வீடுகளில் கிட்டத்தட்ட எல்லாம் விற்றுத் தீர்ந்தன

1 mins read
வார இறுதியில் மொத்தமுள்ள 863 வீடுகளில் 853 வீடுகள் விற்பனை ஆகின
c7440b59-d72b-43b3-9b00-96ddd43f7afc
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) பிற்பகல் 3 மணிக்குள், மொத்தமுள்ள 863 வீடுகளில் 853 வீடுகள் விற்பனையாயின என்று தனியார் கூட்டுரிமை வீட்டுத் திட்டத்தின் மேம்பாட்டாளரான ஹோங் லியோங் ஹோல்டிங்ஸ் தெரிவித்தது. - படம்: ஹோங் லியோங் குழுமம் சிங்கப்பூர்

தெங்கா வட்டாரத்தின் முதல் தனியார் கூட்டுரிமை வீட்டுத் திட்டத்தில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளும் விற்று முடிந்துவிட்டன.

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) பிற்பகல் 3மணிக்குள் மொத்தமுள்ள 863 வீடுகளில் 853 விற்பனையாகின என்று திட்டத்தின் மேம்பாட்டாளரான ஹோங் லியோங் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

கடந்த வார இறுதியில் பொதுமக்களுக்கென விற்பனைக்கு விடப்பட்ட வீடுகள், சராசரியாகச் சதுர அடிக்கு $2,120 என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டன. பொதுவாக அன்று விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் விலை சதுர அடிக்கு $1,779 முதல் $2,340 வரை அமைந்தன.

மாரச் மாதத்திலிருந்து தனியார் வீடுகளின் விற்பனை அதிகரித்து வருவதாகத் தனியார் சொத்து கவனிப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

விற்பனை ஆகாத மீதம் இருந்த 10 வீடுகள், முற்றத்துடன் வடிவமைக்கப்பட்ட நான்கு அறைகளைக் கொண்ட பெரிய அளவிலானவை என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்