சாங்கி விமான நிலையத்தில் பிரபல ‘துபாய் சாக்லெட்’ கடை

சாங்கி விமான நிலையத்தில் பிரபல ‘துபாய் சாக்லெட்’ கடை

1 mins read
cbc8b5dd-d6c7-4d10-916b-2b72ce1de8ec
கடை காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை செயல்படும். - படம்: சாங்கி விமான நிலையம்
Google News Preferred Icon

பிஸ்தா மற்றும் சுவையான கட்டாய்ஃபி (kataifi) ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ‘துபாய் சாக்லெட்’ தற்போது சாங்கி விமான நிலையத்தில் கடை அமைத்துள்ளது.

சாங்கி விமான நிலையத்தின் முதல் முனையத்தில் உள்ள பயணிகள் காத்திருக்கும் ‘டிரான்சிட்’ பகுதியில் அது தற்காலிகக் கடையாக உதித்துள்ளது.

‘துபாய் சாக்லெட்’ உரிமையாளரான பிக்ஸ் டிசர்ட் சாக்லேட்டியர் (Fix Dessert Chocolatier), சாங்கி விமான நிலையத்தில் 2026ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதிவரை இயங்கும் என்று தெரிவித்துள்ளது. ஆசியாவில் அந்நிறுவனம் அமைக்கும் முதல் கடை இது.

தற்காலிகக் கடை காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை செயல்படும். ‘துபாய் சாக்லெட்’ உடன் மேலும் நான்கு சுவைகளில் சாக்லெட்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

2021ஆம் ஆண்டு முதல் ‘துபாய் சாக்லெட்’ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ‘டிக்டாக்’ தளத்தில் வெளியான காணொளி மூலம் அது உலக முழுவதும் பிரபலமானது.

குறிப்புச் சொற்கள்