200 மாணவர்களுக்குப் பொறியியல், தொழில்நுட்ப உபகாரச் சம்பளம்

200 மாணவர்களுக்குப் பொறியியல், தொழில்நுட்ப உபகாரச் சம்பளம்

2 mins read
45984e2a-ff70-48aa-8b3b-275d36143de3
(இடமிருந்து) பொறியியல், தொழில்நுட்ப உபகாரச் சம்பளம் பெற்ற ரியா விஜேஷ், சஹானா ராமபிரசாத். - படம்: கிறிஸ்டோ லியோன்
Google News Preferred Icon

காற்று மாசுபாட்டால் ஏற்பட்ட ஒவ்வாமையிலிருந்து விடுபட காற்றை வடிகட்டும் கருவி ஒன்றைத் தானே வடிவமைத்துப் பயன்படுத்தினார் சஹானா ராமபிரசாத்.

பொறியியலில் ஆர்வம் கொண்ட இவர், கல்வி அமைச்சு வழங்கும் பொறியியல், தொழில்நுட்ப உபகாரச் சம்பளத்தை (இடிபிஎஸ்) அண்மையில் பெற்றுக்கொண்டோரில் ஒருவர்.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (ஸ்டெம்) ஆகியவற்றில் திறமைமிக்க மாணவர்களை, பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு முன்பே மேம்படுத்தவுபடைப்பாற்றல் வழி மாணவர்கள் தங்களது தனித்துவத்தைக் கண்டறியும் பயணத்தை மகிழ்ச்சியுடன் மேற்கொள்ள  இத்திட்டம் ஊக்கம் தர முற்படுவதாக  ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.ழிம், சிங்கப்பூரில் திறன்மிக்க பொறியாளர்களை உருவாக்குவதற்கும் கல்வி அமைச்சின் முயற்சிகளில் ஒரு முக்கிய அங்கமாக ‘இடிபிஎஸ்’ விளங்குகிறது.

மாணவர்கள் ‘ஸ்டெம்’ துறையில் தங்களது அறிவையும் திறமையையும் வளர்த்துக்கொள்ள உதவும் இந்த உபகாரச் சம்பளம் 2023ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

உயர்கல்வி நிலையங்களின் ‘ஸ்டெம்’ பயிலரங்குகள், தொழில் பங்காளிகளின் ஆதரவுடன் வழங்கப்படும் வேலைப்பயிற்சி அனுபவங்கள் ஆகிய இரண்டும் இந்த உபகாரச் சம்பளத்தின் இரு முக்கியக் கூறுகள்.

கல்விக்கான மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி ஜூலை 17ஆம் தேதியன்று சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் நடைபெற்ற பொறியியல், தொழில்நுட்ப உபகாரச் சம்பளம் வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

“புத்தாக்கத்துடனும் பொறுப்புணர்வோடும் செயல்படும் திறமையான பொறியாளர்கள் சிங்கப்பூருக்கு எப்போதும் தேவைப்படுவர்,” என்றார் டாக்டர் ஜனில். 

இவ்வாண்டு 20 பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவர்கள் அந்த உதவித்தொகையைப் பெற்றனர்.

“கற்றுக்கொள்ள ஆர்வம் இருந்தால் நமக்குத் தேவையானதை இணையத்திலேயே தெரிந்துகொள்ளலாம். செய்ய வேண்டியதெல்லாம் முன்முயற்சி எடுத்துத் தொடங்குவதுதான்,” என்றார் சஹானா.

சஹானா தெம்பனிஸ் மெரிடியன் தொடக்கக் கல்லூரியில் முதலாம் ஆண்டில் படிக்கிறார்.

வடிவமைப்பியல் சிந்தனைத் திறன்களையும் தானாகக் கற்றுக்கொண்ட நிரலாக்கத் திறன்களையும் பயன்படுத்திக் காற்றை வடிகட்டும் கருவியை அவர் வடிவமைத்தார் 

“நான் வேதிப்பொறியியல் துறையில் ஆர்வமாக உள்ளேன். பொறியியல் துறையை ஆழமாக ஆராய இது ஓர் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது,” என்று சஹானா கூறினார்.

அடுத்த ஆண்டு அவர் பயிலரங்குகளிலும் வேலைப்பயிற்சியிலும் பங்கேற்கவுள்ளார். 

“இந்த உபகாரச் சம்பளத்தின்மூலம், பொறியியல் துறை எவ்வளவு பரந்தது என்பதைப் புரிந்துகொண்டேன்,” என்றார் 18 வயது ரியா விஜேஷ்.

ராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ரியா, கடந்த ஆண்டு உதவித்தொகையைப் பெற்றார். 

அவர் இவ்வாண்டு நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் செயலாற்றினார்.

சிங்கப்பூர்த் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகம் நடத்திய பயிலரங்கில் அன்றாடச் சவால்களை ஆளில்லா வானூர்தித் தொழில்நுட்பத்தின்மூலம் அணுகக் கற்றுக்கொண்டதாக ரியா கூறினார்.

சிங்கப்பூர்க் குடியரசுக் கடற்படையில் வேலைப்பயிற்சி பெற்ற அவர், அங்குக் கப்பல் வடிவமைப்பு, மின்னிலக்கமயமாக்கல், நிலைத்தன்மை ஆகியவை குறித்து நுணுக்கமாக அறிந்துகொண்டதாகவும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
பொறியியல்அறிவியல்தொழில்நுட்பம்மாணவர்கள்