மரினா பே வட்டாரத்திற்குப் பொலிவூட்ட வரும் ‘டிஸ்னி’ கப்பல்

மரினா பே வட்டாரத்திற்குப் பொலிவூட்ட வரும் ‘டிஸ்னி’ கப்பல்

1 mins read
ae33fb8b-4d30-47fc-bad2-c78009b64f5f
புதிய ‘டிஸ்னி க்ரூஸ் லைன்’ கப்பலின் ஓவியம். - படம்: டிஸ்னி க்ரூஸ் லைன்

ஆசியாவின் முதல் டிஸ்னி சொகுசுக் கப்பல், மார்ச் 13 முதல் 15 வரை மரினா பே வட்டாரத்திற்குக் கூடுதலாகப் பொலிவு சேர்க்கவுள்ளது.

‘டிஸ்னி அட்வென்சர்’ என்ற அக்கப்பலுக்குச் செல்லும் வருகையாளர்கள், ‘மார்வல் லேண்டிங்’ , ‘டாய் ஸ்டோரி பிளேஸ்’ உள்ளிட்ட டிஸ்னியின் உயிரோவியத் திரைப்படங்களைக் கருப்பொருளாகக் கொண்ட வண்ணமிகு காட்சிகளைக் காணலாம்.

‘அண்டர் த சீ’, ‘லெட் இட் கோ’ போன்ற பிரபல டிஸ்னி பாடல்களும் இந்த உல்லாசக் கப்பலில் ஒலிக்கும். அத்துடன், பெரனக்கான் கலாசாரச் சின்னங்களும் சிங்கப்பூரின் தேசிய மலரான ‘வாண்டா மிஸ் ஜோக்கிம்’ ஆர்க்கிட் வடிவங்களும் இடம்பெறும்.

இவற்றுக்கெல்லாம் மகுடம் சூட்டும் விதமாகத் தனித்துவமான வாணவேடிக்கைகளும் நடத்தப்படும்.

பிப்ரவரி 26 முதல் ஏப்ரல் 30 வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியை யுஓபி  வங்கி, மரினா பே சேண்ட்ஸ், சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் ஆகியவை டிஸ்னி க்ரூஸ் லைனுடன்  இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

மரினா பேயில் உள்ள ஏழு இடங்கள், கப்பலின் அலங்காரங்களைப் போன்ற புகைப்படம் எடுப்பதற்கான இடங்களைக் கொண்டிருக்கும்.

குறிப்புச் சொற்கள்