சிங்கப்பூரில் டிஸ்னியின் சொகுசுக் கப்பல் சேவை தொடங்குவதில் தாமதம்

சிங்கப்பூரில் டிஸ்னியின் சொகுசுக் கப்பல் சேவை தொடங்குவதில் தாமதம்

1 mins read
b7e4802f-0422-47fd-aa00-201081747e43
டிஸ்னி அட்வெஞ்சர் கப்பல் சேவை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  - படம்: டிஸ்னி சொகுசுக் கப்பல்துறை
Google News Preferred Icon

டிஸ்னி சொகுசுக் கப்பல்துறை, இவ்வாண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் அதன் முதல் சேவையைத் தொடங்கவிருந்த நிலையில் அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டிஸ்னி அட்வெஞ்சர் எனப்படும் (Disney Adventure) கப்பல்களைக் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

கப்பல் சேவை இவ்வாண்டு டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் டிசம்பர் 15ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதிவரை திட்டமிடப்பட்டிருந்த கப்பல் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 15ஆம் தேதி முன்பதிவு செய்தவர்களுக்கு மார்ச் 10ஆம் தேதி சேவை வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு 50 விழுக்காடு கட்டணம் திருப்பி வழங்கப்படும்.

மாற்றுத் தேதியில் பயணம் செய்ய முடியாதவர்களுக்கு முழுக் கட்டணமும் திருப்பிக் கொடுக்கப்படும். மேலும் அவர்கள் புதிதாகப் பயணம் மேற்கொள்ளும்போது கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை வழங்கப்படும். ஆசியாவில் முதல்முறையாகச் சொகுசுக் கப்பல் சேவையைத் தொடங்குகிறது டிஸ்னி.

அதன் முதல் பயணம் சிங்கப்பூரில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
கப்பல்சொகுசுக் கப்பல்பயணம்