கேலாங் காப்பிக் கடையில் 33 பெண்கள் கைது

கேலாங் காப்பிக் கடையில் 33 பெண்கள் கைது

1 mins read
e974050c-c766-429a-9121-89496d52eb9e
விசாரணைக்குச் சில பெண்கள் ஒத்துழைக்க மறுத்ததாகக் கூறப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கேலாங்கில் காப்பிக் கடை ஒன்றில் அதிகாரிகள் மேற்கொண்ட குற்றத் தடுப்பு நடவடிக்கையில் 33 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்த காப்பிக் கடையில் இருந்த ஆண்களிடமும் பெண்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது, ஊடகங்களிடமிருந்து தங்கள் அடையாளங்களை மறைப்பதற்காக சீனா, வியட்னாம் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டைக் கொண்ட பெண்கள் தங்கள் முகத்தைக் கைகளைக் கொண்டு மறைத்துக்கொண்டதாகக் கூறப்பட்டது.

கேலாங் லோரோங் 29க்கு அருகில் இருக்கும் காப்பிக் கடையில் பாலியல் நடவடிக்கையில் பெண்கள் ஈடுபடுவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அவர்கள் திங்கட்கிழமை (அக்டோபர் 7) இரவு 9.30 மணியளவில் நடத்திய தேடுதல் வேட்டையில் 33 பெண்கள் மாதர் சாசனத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்குச் சில பெண்கள் ஒத்துழைக்க மறுத்ததாகவும் தங்களுக்கு எதுவும் தெரியாது அல்லது என்ன நடக்கிறது என்று தெரியவில்லை எனச் சைகை மொழியில் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
கைதுபெண்கள்சைகை மொழி