மசேநிதியின் புதிய முதலீட்டுத் திட்டம் அறிமுகம்

மசேநிதியின் புதிய முதலீட்டுத் திட்டம் அறிமுகம்

2 mins read
8bd4dbaa-3112-4def-8fe9-79e86a86a24b
புதிய முதலீட்டுத் திட்டம் 2028ஆம் ஆண்டு நடப்புக்கு வரும். - படம்: பிஸ்னெஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

மத்திய சேம நிதிக் (மசே நிதி) கழகம் புதிய முதலீட்டுத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.

அத்திட்டம் 2028ஆம் ஆண்டு நடப்புக்கு வரும்.

எளிமையாக்கப்பட்ட, குறைந்த கட்டண, பல்வகைப்படுத்தப்பட்ட முதலீடுகளை இத்திட்டம் வழங்கும்.

நீண்டகால முதலீட்டில் தொடர்ந்திருக்க விருப்பம் உள்ளவர்கள், குறைந்த நிதிசார் நிபுணத்துவம் உள்ளவர்கள் அல்லது தங்கள் முதலீடுகளைத் தீவிரமாக நிர்வகிக்க விருப்பம் இல்லாதவர்களுக்கும் திட்டம் பொருந்தும்.

தங்களின் சேமிப்பை அதிகம் பெருக்க விரும்புவோருக்கு அதிக முதலீட்டுத் தெரிவுகள் வழங்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் குறிப்பிட்டார்.

தற்போதைய மசேநிதி செயல்முறை ஓய்வுக்காலத்தை நோக்கிச் செல்லும் சிங்கப்பூரர்கள் அவர்களின் சேமிப்புகளை வளர்க்க நிலையான, அபாயமற்ற வட்டி விகிதங்களை வழங்கி வருகிறது.

முதலீடு செய்யத்தக்க சேமிப்பு உள்ளவர்களுக்கு மசேநிதி முதலீட்டுத் திட்டம் தங்கள் சேமிப்பை பல்வேறு நிதித் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான தெரிவை வழங்குகிறது.

புதிய திட்டம் ஏற்கெனவே இருக்கும் செயல்முறையை நிறைவு செய்து கூடுதல் வருமானம் பெறும் வாய்ப்பிற்காக, ஓரளவிற்கு நிதி அபாயங்களை ஏற்கத் தயாராக உள்ள நீண்டகால முதலீட்டாளர்களுக்கு ஏற்றதாக அமையும்.

குறைந்த எண்ணிக்கையிலான தெரிவுகளை வழங்க இரண்டு முதல் மூன்று நம்பகமான நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

அரசாங்கமும் இத்திட்டத்தை வழிநடத்தத் தயாராக இருக்கும் என்றும் இதில் பங்கேற்பது மசேநிதி உறுப்பினர்களின் விருப்பத்தின் அடிப்படையிலானது என்றும் பிரதமர் கூறினார்.

வழங்கப்படும் தெரிவுகளில் நிறைந்துள்ள ஆபத்துகளையும் முதலீடுகளையும் நன்கு மசேநிதி உறுப்பினர்கள் ஆராய வேண்டும். இது குறித்த கூடுதல் தகவல்களை மனிதவள அமைச்சும் மசேநிதியும் வழங்கவுள்ளதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
வரவுசெலவுத் திட்டம் 2026Budget 2026மத்திய சேம நிதிதிட்டம்முதலீடு