மதுபானப் புட்டிகள் ஏற்றுமதி தொடர்பாகப் பொய்த் தகவல் அளித்த ஆடவர் 42 வாரங்களுக்குச் சிறையில் அடைக்கப்படவிருக்கிறார்.
ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய கிட்டத்தட்ட 20,000 மதுபானப் புட்டிகள் வரி செலுத்தப்படாத நிலையில் கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
மதுபானப் புட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கும்படி தளவாடச் சேவை நிறுவனத்திடம் 59 வயது ஆல்ஃபிரட் ஜேம்ஸ் மார்ட்டின் கலிஸ்டன் பணித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அந்த மதுபானம் சிங்கப்பூரின் கடற்பகுதிக்கு வெளியே உள்ள கப்பல்களில் இருக்கும் கடலோடிகளுக்கும் பயணிகளுக்கும் உரியவை என்று தெரியவந்துள்ளது.
கப்பல்களின் கடலோடிகளுக்கும் பயணிகளுக்கும் விற்கப்படும் பொருள்களுக்கு வரி விதிக்கப்படுவதில்லை.
இந்நிலையில், மதுபானப் புட்டிகளைக் கப்பல்களுக்கு அனுப்பிவைக்காமல் வரி செலுத்தாமல் கிடங்கில் வைப்பட்டிருந்ததாக செப்டம்பர் 19ஆம் தேதியன்று சிங்கப்பூர் சுங்கத்துறை கூறியது.
ஆல்ஃபிரட் ஜேம்சுக்கு $567,741.55 அபராதம் விதிக்கப்பட்டது.
ஆனால் அபராதம் செலுத்துவதற்குப் பதிலாக அவர் 42 வாரங்களுக்குச் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதியன்று ஓல்டு டோ டக் சாலையில் உள்ள கிடங்கில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தியபோது வரி செலுத்தப்படாத மதுபானப் புட்டிகளைக் கண்டெடுத்தனர்.

