போனஸ், சம்பள உயர்வைக் குறைக்க நிறுவனங்கள் திட்டம்: கருத்தாய்வு

போனஸ், சம்பள உயர்வைக் குறைக்க நிறுவனங்கள் திட்டம்: கருத்தாய்வு

2 mins read
9c8e3f59-275c-435e-81d4-5d0420ed3dcb
படம்: - பிஸ்னஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

நிலையற்ற பொருளியல் சூழலுக்கு மத்தியில் சிங்கப்பூரில் சம்பள உயர்வு, போனஸ் ஆகியவை ‘சீராக்கப்படும்’ அறிகுறிகள் தென்படுவது கருத்தாய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

மேன்பவர்குரூப் நிறுவனம் 504 சிங்கப்பூர் நிறுவனங்களைக் கொண்டு நடத்திய கருத்தாய்வில் இத்தகவல் தெரிய வந்துள்ளது. பொருளியல் சூழல் நிலையற்றிருப்பதால் நிறுவனங்கள் வருமானம், போனஸ் ஆகியவற்றைப் பொறுத்தவரை எச்சரிக்கையுடன் செயல்படுவதாகதாகத் தெரிகிறது.

குறைவான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஐந்து விழுக்காடு அல்லது அதற்கும் மேலான சம்பள உயர்வைத் தரத் திட்டமிட்டுள்ளன. 2025/2026 காலத்தில் அவ்வாறு செய்யத் திட்டமிட்டுள்ள நிறுவனங்களின் விகிதம் 23 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டு இவ்விகிதம் 26 விழுக்காடாக இருந்தது.

அதேபோல், ஏழு விழுக்காடு அல்லது அதற்கும் மேலான சம்பள உயர்வை வழங்கத் திட்டமிட்டுள்ள நிறுவனங்களின் விகிதம் முந்தைய ஆண்டு பதிவான ஆறு விழுக்காட்டிலிருந்து ஐந்து விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது.

கூடுதலான நிறுவனங்கள் மூன்று விழுக்காட்டுக்கும் குறைவான சம்பள உயர்வை வழங்கத் திட்டமிட்டுள்ளன. இத்தகைய நிறவனங்களின் விகிதம் 18 விழுக்காட்டிலிருந்து 21 விழுக்காட்டுக்குக் கூடியது.

அதேபோல், கருத்தாய்வில் பங்கேற்ற கிட்டத்தட்ட பாதி நிறுவனங்கள் சரியாக ஒரு மாதத்துக்கான போனசை வழங்கத் திட்டமிட்டுள்ளன. கருத்தாய்வில் பங்கேற்ற 45 விழுக்காட்டு நிறுவனங்கள் இவ்வாறு செய்யத் திட்டமிட்டுள்ளன. இவ்விகிதம், முந்தைய ஆண்டில் 42 விழுக்காடாக இருந்தது.

போனஸ் தரத் திட்டமிட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன. ஒரு மாத காலத்துக்கும் குறைவான போனஸ் வழங்கத் திட்டமிட்டுள்ள நிறுவனங்களின் விகிதம் 11லிருந்து 10 விழுக்காட்டுக்குக் குறைந்தது.

34 விழுக்காட்டு நிறுவனங்கள் ஒன்றரை மாத காலம் வரைக்குமான போனசை வழங்கத் திட்டமிட்டுள்ளன. 11 விழுக்காட்டு நிறுவனங்கள் அதற்கும் அதிக காலத்துக்கான போனஸ் வழங்கும் எண்ணம் கொண்டுள்ளன. இந்த இரு பிரிவுகளிலும் விகிதம் முந்தைய ஆண்டு பதிவானதைவிட ஒரு விழுக்காடு குறைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்வருமானம்வர்த்தகம்நிறுவனம்