பயணி டாக்சியின் பின்பகுதியில் ஏறிய சம்பவம்: கம்ஃபர்ட் டெல்குரோ விசாரணை

பயணி டாக்சியின் பின்பகுதியில் ஏறிய சம்பவம்: கம்ஃபர்ட் டெல்குரோ விசாரணை

1 mins read
73797e0f-465b-42bd-833e-60f0911964a7
இருவர் டாக்சியில் ஏறுவதையும், ஒருவர் பின்பகுதிக்குள் குதிப்பதையும் காணொளியில் காணமுடிந்தது. - படம்: ஃபேஸ்புக்/எஸ்ஜி ரோட் விஜிலாண்டே
Google News Preferred Icon

பயணி ஒருவர் டாக்சியின் பின்பகுதிக்குள் செல்வதைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் வலம்வருவதைத் தொடர்ந்து, அதன் தொடர்பில் கம்ஃப்ர்ட் டெல்குரோ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு ஃபேஸ்புக் குழுவான எஸ்ஜி ரோட் விஜிலாண்டே ஏப்ரல் 12ஆம் தேதி பதிவிட்ட காணொளி ஒன்றில், விவோ சிட்டியில் நீல நிற கம்ஃப்ர்ட் டெல்குரோ டாக்சி ஒன்றுக்கு அருகில் நான்கு இளம் ஆடவர்கள் காணப்படுகின்றனர்.

அவர்களில் இருவர் டாக்சியில் ஏறுவதையும், ஒருவர் டாக்சியின் பின்பகுதிக்குள் குதிப்பதையும் காணமுடிந்தது. மற்றொருவர் டாக்சியில் ஏறுவதற்கு முன்னர், அதன் பின்பகுதியை மூடுவதையும் காணொளியில் காணமுடிந்தது.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், “பயணி ஒருவர் டாக்சியின் பின்பகுதிக்குள் செல்வதைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம்வருவது குறித்து நாம் அறிகிறோம்,” என்று கம்ஃப்ர்ட் டெல்குரோவின் பேச்சாளர் கூறினார்.

“பயணிகளின் பாதுகாப்பு நமது முன்னணி முன்னுரிமை. டாக்சியின் பின்பகுதியில் பயணம் செய்வது ஆபத்தானது, கண்டிப்பாகத் தடைசெய்யப்பட்டுள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார்.

ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்தக் காணொளி 39,000க்கும் மேற்பட்ட முறை காணப்பட்டுள்ளது.

அதற்கு 140க்கும் மேற்பட்ட கருத்துகள் வந்துள்ளன.

இந்நிலையில், சம்பவத்தின் தொடர்பில் விசாரித்து வருவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
டாக்சிகாணொளிபயணம்