மோட்டார்சைக்கிள்கள் தவிர அனைத்துப் பிரிவுகளிலும் ‘சிஓஇ’ கட்டணங்கள் உயர்வு

மோட்டார்சைக்கிள்கள் தவிர அனைத்துப் பிரிவுகளிலும் ‘சிஓஇ’ கட்டணங்கள் உயர்வு

1 mins read
07cf4eb8-1291-428b-8563-24d36dbae6fa
‘பி’ பிரிவுக்கான சிஓஇ கட்டணம், 2023 டிசம்பருக்குப் பிறகு ஆக அதிகமாகும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

வாகன உரிமைச் சான்றிதழ்களுக்கான (சிஓஇ) புதன்கிழமை (ஆகஸ்ட் 6) நடைபெற்ற ஏலத்தில், மோட்டார்சைக்கிள்கள் தவிர அனைத்துப் பிரிவுகளிலும் கட்டணங்கள் அதிகரித்தன.

பெரிய, அதிக ஆற்றலுடைய கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்குமான ‘பி’ பிரிவுக் கட்டணம் 3.7 விழுக்காடு அதிகரித்து $119,101லிருந்து $123,498க்கு உயர்ந்தது. இது, 2023 டிசம்பருக்குப் பிறகு இந்தப் பிரிவுக்கான ஆக அதிகக் கட்டணமாகும். 2023 டிசம்பரில் இது $130,100ஆக இருந்தது.

சிறிய, குறைந்த ஆற்றலுடைய கார்களுக்கான ‘ஏ’ பிரிவுக் கட்டணம் $101,102லிருந்து 0.9 விழுக்காடு அதிகரித்து $102,009ஆகப் பதிவானது.

பொதுப் பிரிவுக்கான (‘இ’ பிரிவு) சிஓஇ கட்டணம் 1.9 விழுக்காடு கூடி $120,000லிருந்து $122,334ஆக இருந்தது. பொதுப் பிரிவுச் சான்றிதழ்களை மோட்டார்சைக்கிள்கள் தவிர வேறெந்த வாகன வகைக்கும் பயன்படுத்தலாம் என்றாலும் பொதுவாக பெரிய, சக்திவாய்ந்த கார்களுக்காக அவை பயன்படுத்தப்படுகின்றன.

வணிக வாகனங்களுக்கான (‘சி’ பிரிவு) கட்டணம் $68,600லிருந்து 2 விழுக்காடு உயர்ந்து $70,001ஆகப் பதிவானது.

மோட்டார்சைக்கிள்களுக்கான (‘டி’ பிரிவு) கட்டணம் மட்டும் $9,511லிருந்து 3.4 விழுக்காடு குறைந்து $9,189ஆக முடிந்தது.

குறிப்புச் சொற்கள்