பெரும்பாலான பிரிவுகளில் சிஓஇ கட்டணங்கள் இறக்கம்

பெரும்பாலான பிரிவுகளில் சிஓஇ கட்டணங்கள் இறக்கம்

1 mins read
40a00914-8344-40ee-88f8-042a8fa83000
கடந்த நான்கு ஏலக் குத்தகைகளில் ஏ’ பிரிவு சிஓஇ கட்டணம் உயர்ந்திருந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்கள், புதன்கிழமை (மே 21) முடிவடைந்த ஏலக் குத்தகையில் பெரும்பாலான பிரிவுகளில் இறக்கம் கண்டன.

சிறிய, குறைந்த ஆற்றலுடைய கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்குமான (‘ஏ’ பிரிவு) சிஓஇ கட்டணம் 0.5 விழுக்காடு குறைந்து $102,501ஆகப் பதிவானது. மே 7ஆம் தேதி நடந்த இதற்கு முந்தைய ஏலத்தில் அது $103,009ஆக இருந்தது.

கடந்த நான்கு ஏலக் குத்தகைகளாக ‘ஏ’ பிரிவு சிஓஇ கட்டணம் உயர்ந்திருந்தது.

பெரிய, கூடுதல் ஆற்றலுடைய கார்களுக்கும் மின்சார வாகனங்களுக்குமான (‘பி’ பிரிவு) கட்டணம் $119,890லிருந்து 2.4 விழுக்காடு சரிந்து $116,988ஆகப் பதிவானது.

பொதுப் பிரிவுக்கான (‘இ’ பிரிவு) கட்டணம் $118,889லிருந்து 0.7 விழுக்காடு இறங்கி $118,010 ஆனது.

மோட்டார்சைக்கிள்களுக்கான (‘டி’ பிரிவு) கட்டணம் வெறும் $2 குறைந்து $8,707 ஆனது.

ஆனால், வணிக வாகனங்களுக்கான (‘சி’ பிரிவு) கட்டணம் $62,590லிருந்து 1 விழுக்காடு கூடி $63,189ஆகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்